Published : 29 May 2024 05:17 AM
Last Updated : 29 May 2024 05:17 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: மருந்து உண்ண, மருந்து தயாரிக்க, யோகா, தியானம் செய்ய, வாழை, கரும்பு நட, கடன் பைசல் செய்ய, நவக்கிரக வழிபாடு செய்ய நன்று. யோக ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாசிப் பருப்பு பாயசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம், பதற்றம் நீங்கும். ஏழை, எளியவர்களுக்கு பச்சைப் பயிறு தானம் செய்வதும் நன்மை அளிக்கும்.

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியவர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி உண்டாகும். இழுபறியாக இருந்த கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள்.

ரிஷபம்: சுபச் செலவுகள் வரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இடவசதி இல்லாமல் தவித்தீர்களே, அந்த நிலை மாறும். நல்ல இடவசதியுடன் கூடிய பெரிய வீட்டில் குடிபுகுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வீர்கள்.

மிதுனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். புதிய திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பல வகையிலும் பொருட்கள் சேரும். எதிலும் நிதானம் தேவை.

கடகம்: திடீர் பயணம், அலைச்சல், செலவு, மன உளைச்சல் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களால் தொந்தரவுகள் வந்து நீங்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசுங்கள். எதிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நன்கு யோசித்து பொறுமையாக செயல்படுவது அவசியம்.

சிம்மம்: பூர்வீக சொத்து பிரச்சினைகளை பேசி தீர்க்க வழி பிறக்கும். பணப் பற்றாக்குறை விலகும். குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று, நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. பங்குதாரர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

கன்னி: நேர்முக, மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். கணவன் -மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறைந்து, அன்யோன்யம் உண்டாகும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். வெளியூர், வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும்.

துலாம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். அலைச்சல் இருந்தாலும் அனுகூலம், லாபமும் உண்டு,

விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தக்க சமயத்தில் பணம் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த சிலரது உதவியை நாடுவீர்கள். அரசு, வங்கி கடன் உதவிகள் கிடைக்கும்.

தனுசு: கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்று கருதிய பணம் கைக்கு வந்துசேரும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பொருட்கள் சேரும். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு ஏற்படும்.

மகரம்: வீண் விவாதங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பிள்ளைகளால் நிம்மதி கிடைக்கும். அலுவலகத்தில் வேலைச்சுமையால் உடல் சோர்வு வரக்கூடும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். பண வரவு உண்டாகும்.

கும்பம்: குடும்பத்தில் எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி இருக்கும். பழைய கடன் பைசலாகும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் உடைபடும். பணப் பற்றாக்குறை இருந்தாலும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.

மீனம்: எதிர்பார்த்த பணம் உரிய நேரத்தில் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பதவிகள், பொறுப்புகளால் உற்சாகம் அடைவீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். அவர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. அலுவலகத்தில் உயர் அதிகாரி பாராட்டுவார்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x