Published : 29 May 2023 05:30 AM
Last Updated : 29 May 2023 05:30 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தொழில், வியாபாரத்தில் முக்கிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவு செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும்.

ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர் கள். குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகள், நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.

மிதுனம்: புதிய கோணத்தில் சிந்தித்து, பழைய பிரச்சினையை தீர்ப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவு அதி கரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

சிம்மம்: மனைவி வழியில் மதிப்பு கூடும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவி கள் கிடைக்கும்.

கன்னி: பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். உறவினர், நண்பர்களின் பேச்சு, செயல்பாடுகள் உங்களுக்கு பிடிக்காமல் போகும். எந்த சூழலிலும் பொறுமையை இழக்காதீர்கள்.

துலாம்: வெளி வட்டாரத்தில் அலைச்சல், அசதி அதிகரிக்கும். பணிச் சுமையால் தலைவலி வந்து நீங்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசிய செலவு களை தவிர்க்கப் பாருங்கள்.

விருச்சிகம்: குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள்.

தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்புகள் நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்கவேண்டி வரும்.

மகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிந்து சரி செய்வீர்கள். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங் கள். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

மீனம்: சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய நட்பு மலரும். திருமண முயற்சி பலிதமாகும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x