Published : 26 Apr 2023 05:35 AM
Last Updated : 26 Apr 2023 05:35 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மரியாதை கூடும்.

ரிஷபம்: வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். வாகனச் செலவு நீங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். கலை பொருட்கள் சேரும்.

மிதுனம்: மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். யாரை நம்புவது என்ற மனக் குழப்பத் துக்கு ஆளாவீர்கள். பணவரவு திருப்தி அளிக்கும்.

கடகம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள்.

சிம்மம்: புது முயற்சிகள் வெற்றியடையும். சொத்து சம்பந்தப் பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

கன்னி: எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்ப துடன் தடைபட்ட காரியங்களையும் விரைந்து முடிப் பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதத்தை ரசிப்பீர்கள். பழைய சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள்.

துலாம்: மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உடன்பிறந்த வர்களால் உதவிகள் கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

விருச்சிகம்: கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், சிறு சிறு அவமானங்களை நினைத்து தூக்கம் குறையும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகள் எதிர்காலம் குறித்த கவலை இருக்கும்.

தனுசு: வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும்.

மகரம்: பிரியமானவர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சொந்த - பந்தங்களுக்கு மத்தி யில் மதிக்கப்படுவீர்கள். தேவையில்லாமல் பேசி வீண் பழிக்கு ஆளாக வேண்டாம். அமைதி காக்கவும்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கையில் பணம் புரளும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. புதிய மனை வாங்க திட்டமிடுவீர்கள்.

மீனம்: தெளிவான முடிவுகளை எடுத்து அருகிலிருப்பவர் களை ஆச்சரியப்படுத்துவீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங் களை பூர்த்தி செய்வதால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x