Published : 30 Mar 2023 05:37 AM
Last Updated : 30 Mar 2023 05:37 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

ரிஷபம்: மனசாட்சிபடி செயல்படுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்டநாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதி பெருகும்.

மிதுனம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். மாலை முதல் சாதகமான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக எதிர்கொள்வீர்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதி கரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள்.

கன்னி: உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர் காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

துலாம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் நீங்கும். தடைபட்ட வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள்.

விருச்சிகம்: எந்த வேலையையும் சிந்தித்து நிதானமுடன் செய்வது நல்லது. பிள்ளைகளின் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார்.

தனுசு: பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவு படுத்திக் கட்ட திட்டமிடுவீர்கள். ஆனால் மாலை முதல் எச்சரிக்கை தேவை. தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்: வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும். குடும்பத் தினரின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு உண்டு.

கும்பம்: மனைவிவழி உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பால்ய நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.

மீனம்: கடனை தீர்க்க புது வழிகளை யோசிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை உண்டு. குடும் பத்துடன் ஆன்மிகப் பயணம் செல்வீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x