Published : 04 Jan 2022 08:21 AM
Last Updated : 04 Jan 2022 08:21 AM

2022 எப்படி இருக்கும்?  பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே! எதிர்பாராத செலவு; வேலையில் கவனம்; மனக்குழப்பம்;வழக்கில் வெற்றி! 


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


பூரட்டாதி:


கேதுவை நட்சத்திரநாதனாகக் கொண்ட பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!


இந்த ஆண்டு உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும்.

தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பொறுப்புகளை கவனமாகச் செய்வது நல்லது.

இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் ஆயுதங்களைக் கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதும் செயல்படுவதும் அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதைத் தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். கலைத்துறையினருக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகளுக்கு தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்களில் உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும்.

பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

பரிகாரம்: தக்ஷிணாமூர்த்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.

மதிப்பெண்கள்: 71% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x