Published : 04 Nov 2021 10:29 AM
Last Updated : 04 Nov 2021 10:29 AM

துலாம், விருச்சிகம், தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


கிரகநிலை:


ராசியில் செவ்வாய், சூரியன், சந்திரன், புதன் - தன ஸ்தானத்தில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.


பலன்கள் ;

எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை எந்த சுகத்தையும் தள்ளி வைக்கும் குணம் கொண்ட துலா ராசியினரே!

நீங்கள் அனைவரையும் அனுசரித்து செல்வதில் திறமை உடையவர். இந்த வாரம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். வழக்குகளில் இருந்து வந்த தொய்வு நீங்கி வேகம் எடுக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறலாம். மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வில் வெற்றி பெறுவீர்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் கூடிய நல்ல வேலை கிடைக்கும்.

வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். தடைபட்டிருந்த கல்வியை தொடர்ந்து முடித்து பயனடைவீர்கள்.

பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி;
**********************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:


ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சனி - களத்திர ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சந்திரன், புதன் என கிரக நிலவரம் உள்ளது.


பலன்கள் :

அனைவருடன் நல்லமுறையில் பழகக் கூடிய விருச்சிக ராசியினரே!

உங்களுக்கு வரும் முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். இந்த வாரம் எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். வெற்றி கிடைப்பதில் இருந்த தடை தாமதம் நீங்கும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். வழக்குகளில் இருந்து வந்த சோதனைகள் மாறும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் அகலும்.

தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்திலிருந்து கொடுத்த வேலையை சரியாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நல்லது. உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.

பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

பரிகாரம்: முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;
*******************


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)


கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - தன ஸ்தானத்தில் குரு, சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சந்திரன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலவரம் உள்ளது.

பலன்கள் :


நிதானமாகவும், செம்மையாகவும் காரியத்தை செய்து வெற்றிபெறும் தனுசு ராசியினரே!


உங்களை எல்லோரும் நேசிப்பார்கள். இந்த வாரம் பணவரத்து அதிகமாகும். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உங்கள் வாக்குவன்மை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடை நீங்கும். ஆரோக்கிய குறைபாடு நீங்கும். மனசோர்வு அகலும்.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். எதிர்நோக்கியிருந்த பணியிட மாற்றம் குறித்த செய்திகள் மனமகிழ்ச்சியைத் தரும். உங்கள் கருத்துகளை சக ஊழியர்கள் ஆமோதிப்பார்கள்.
குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும் படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து வர குரு அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x