Published : 15 Oct 2021 15:17 pm

Updated : 15 Oct 2021 15:17 pm

 

Published : 15 Oct 2021 03:17 PM
Last Updated : 15 Oct 2021 03:17 PM

துலாம் ராசி அன்பர்களே! அக்டோபர் மாத பலன்கள்; எதிர்ப்பு விலகும்; கோபம் வேண்டாம்; திடீர் செலவு உண்டு; வேலையில் பொறுப்பு!

thulam-rasi-palangal-october-palangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி, குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - விரய ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் என கிரகநிலை உள்ளது.
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
18ம் தேதி சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.
23ம் தேதி செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
30ம் தேதி புதபகவான் ராசிக்கு மாறுகிறார்.
31ம் தேதி சுக்கிர பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

இந்த மாதம் திடீர் கோபம் உண்டாகும். விருப்பத்திற்கு மாறாக எல்லாம் நடக்கும். ஆனால் பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன்களைத் தரலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மன நிறைவு காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்குப் பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் வீண் பிரச்சினை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் செயல்களால் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது ஆறுதலை தரும்.

பெண்களுக்கு கோபகத்தைக் குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும்.
மாணவர்களுக்கு சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுர்யமாகப் பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது.


சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மனதில் கொண்ட குறிக்கோளை அடையும்வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கெட்ட கனவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம்.


சுவாதி:
இந்த மாதம் எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியைச் செய்வது போன்றவையும் வந்து சேரும்.


விசாகம் 1, 2, 3ம் பாதம்


இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும். கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம்.


பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.
சந்திராஷ்டம தினங்கள்: 23, 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன்
******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

துலாம் ராசி அன்பர்களே! அக்டோபர் மாத பலன்கள்; எதிர்ப்பு விலகும்; கோபம் வேண்டாம்; திடீர் செலவு உண்டு; வேலையில் பொறுப்பு!துலாம்துலாம் ராசிதுலாம் ராசிபலன்கள்அக்டோபர் மாத பலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்துலாம் ராசி - அக்டோபர் மாத பலன்கள்ஜோதிடம்ஜோதிட பலன்கள்ThulamThulam rasipalangalThulam rasi palangal - october palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x