Published : 30 Sep 2021 06:48 PM
Last Updated : 30 Sep 2021 06:48 PM

துலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள்; செப்டம்பர் 30 முதல் அக்டோபர்  6ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி, குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - விரைய ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் என கிரகநிலை உள்ளது.
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

நிர்வாகத் திறமையும் தெளிவான சிந்தனையும் கொண்ட துலா ராசியினரே!

இந்த வாரம் உங்களுக்கு மனதில் துணிவு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனவருத்தங்கள் குறையும். எதையும் எல்லை மீறாமல் பார்த்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். புத்திரர்களுக்கு நன்மை உண்டாகும்.

பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்சினை குறையும். புத்திசாதுர்யம் அதிகரிக்கும். காரியங்களில் தடைதாமதம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அடுத்தவர் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு காரிய அனுகூலமும், பணவரத்தும் இருக்கும். மாணவர்கள் படிப்பில் தடை ஏற்படாமல் இருக்க மிகவும் நன்கு படிப்பது நல்லது.

பரிகாரம்: நரசிம்மரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
************************************

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)


கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் சனி, குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

ஆன்மிக சிந்தனை மிக்கவர்களான விருச்சிக ராசியினரே!

இந்த வாரம் எதிலும் வேகம் காட்டுவீர்கள். எதிர்பாலினத்தவரிடம் அளவுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். இடமாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். மனதில் ஏதேனும் கவலை இருக்கும். உடல் உழைப்பு அதிகமாகும். புதிய பதவி தேடிவரும். பெண்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்: துர்கை அம்மனை வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்திதரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
******************************

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - அயனசயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

தன்னடக்கம் மிகுந்த தனுசு ராசியினரே!

இந்த வாரம் உங்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். ஆனால் அதே நேரத்தில் ஓயாத வேலையும் அலைச்சலும் இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உத்தியோக மாற்றம் உண்டாகலாம். செலவு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும் விதத்தில் ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் நண்பர்கள் உங்களை சரிவர புரிந்து கொள்ளாமல் உங்களைவிட்டு பிரிந்து செல்லக்கூடும்.

திடீர் மனக்கவலை ஏற்படும். குறிக்கோள் இல்லாமல் அலைய வேண்டி இருக்கலாம். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படலாம். மாணவர்கள் மிகவும் கவனமாக படிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.

பரிகாரம்: பிரம்மாவை வழிபடுவது கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x