Published : 29 Jun 2021 13:34 pm

Updated : 29 Jun 2021 13:35 pm

 

Published : 29 Jun 2021 01:34 PM
Last Updated : 29 Jun 2021 01:35 PM

மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூலை 4ம் தேதி வரை

vaara-natchatira-palangal


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம் -


நன்மைகள் பலவாறாக நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

குடும்பத்தினருடைய அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். எதிர்பாராத தன லாபமும் உண்டாகும். முக்கியமான விஷயங்களில் நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உண்டாகும்.

சொத்து தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வது லாபம் தரக் கூடியதாக இருக்கும். புதிதாக தொழில் அல்லது வியாபாரம் தொடங்கும் எண்ணம் உடையவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தேவையான உதவிகள் தேடி வரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவியுடன் முக்கியமான பணிகளைச் செய்து முடிப்பீர்கள், உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். நீண்ட நாளாக தாமதப்பட்டுக் கொண்டிருந்த சலுகைகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். வீடு நிலம் தொடர்பான வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஆதாயம் தரக்கூடிய வியாபாரங்கள் பேசி முடிக்கப்படும்.

பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய நாள். அலுவலகத்தில் இயல்பான நிலையே இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணவரவு சீராக இருக்கும்.

செவ்வாய்-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்ததற்கும் மேலாக கிடைக்கும். திடீர் தனலாபம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

புதன் -
பொறுமை, நிதானம் அவசியம். நிதானத்தை இழந்தால் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியது வரும். கடன் தொடர்பான பிரச்சினைகளில் அமைதியாக இருப்பது நல்லது. தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

வியாழன்-
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது, புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கி கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் இன்று நல்ல முடிவுக்கு வரும்.

வெள்ளி-
எடுத்துக் கொண்ட எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

சனி-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வியாபாரிகள் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை கையாளும் போது கவனமாக இருப்பது நல்லது.

ஞாயிறு-
நண்பர்களாலும் உறவினர்களாலும் மகிழ்ச்சிகரமான செய்திகளை கிடைக்கப்பெறுவீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும்.
*********

பூராடம் -

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம்.

தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சொத்து வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அலுவலகப் பணிகளில் அதிருப்தியான சூழ்நிலை இருக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாற்றும் முயற்சி இப்பொழுது சாதகமாக இருக்கும். அயல்நாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும்.

அயல்நாடுகளில் வசிப்பவர்களுக்கு குடியுரிமை தொடர்பான விஷயங்கள் மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும். வியாபாரம் வளர்ச்சியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம்-

திங்கள்-
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறக்கூடிய நாள். நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய்-
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். பயணங்களால் நன்மைகள் நடைபெறும். வியாபாரம் தொடர்பாக புதிய நபர்கள் அறிமுகமாவார்கள்.

புதன்-
குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஒப்பந்தங்கள் நிறைவேறும். நெருங்கிய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

வியாழன்-
சிறுதூர பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழிலுக்குத் தேவையான முதலீடுகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

வெள்ளி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பாரத அளவுக்கு தாராளமாக இருக்கும். தேவையான உதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். தொழில் தொடர்பான உதவிகள், ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

சனி-
தேவைகள் பூர்த்தியாகக் கூடிய நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதி நிலையை எட்டும். எதிர்பார்த்த வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

ஞாயிறு-
வீண்செலவுகள் ஏற்படும், நண்பர்களால் தர்ம சங்கடங்கள் ஏற்படும். உடல் நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் நடக்கும்.
********

உத்திராடம் -

முயற்சிகளில் எளிதான வெற்றியைக் காண்பீர்கள்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளை கவனித்து பணிகளைச் செய்ய வேண்டும். சோம்பலை விடுத்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். பணிகளில் அலட்சியப்போக்கு வேண்டாம். குடும்பத்தினர் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்து தருவீர்கள்.

இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்க வேண்டியது வரும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனமும் அக்கறையும் காட்டவேண்டும், அலட்சியமாக இருக்க வேண்டாம். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். சிலருக்கு கடன் பிரச்சினைகள் நெருக்கடி தருவதாக இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்புகளோ பிரச்சனைகளோ வராது.

வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த புத்திர பாக்கியம் உருவாகும். புத்திர பாக்கியத்திற்காக மருத்துவச் செலவுகள் இனி இருக்காது.

மாணவர்களுக்குக் கல்வியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவலகத்தில் தேங்கி நின்ற வேலைகள் அனைத்தும் முடியும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபார ஒப்பந்தம் ஏற்படும். ஆதாயம் தரக்கூடிய வியாபார ஒப்பந்தம் ஒன்று நிறைவேறும்.

செவ்வாய்-
தேவையற்ற சர்ச்சையில் சிக்க வேண்டாம். அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவது பிரச்சினையை உண்டு பண்ணும்.

புதன்-
மனநிம்மதி ஏற்படும் நாள். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குடும்ப பிரச்சினைகள் தீரும். தொழில் வளர்ச்சி மனநிறைவைத் தரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

வியாழன்-
லாபகரமான நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணக்கூடியதாக இருக்கும். வேலையில் இடமாற்றம் தொடர்பான தகவல் கிடைக்கும்.

வெள்ளி -
வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கையும் உண்டு. நண்பர்கள் மூலமாக ஆதாயம் தரும் வியாபாரம் கிடைக்கும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன நிறைவைத்தரும்.

ஞாயிறு-
அலைச்சல் அதிகரிக்கும், எதிர்பார்ப்புகள் சற்று ஏமாற்றம் தரும். வீண் விவாதம் வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீவிநாயகர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.



தவறவிடாதீர்!

மூலம்பூராடம்உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூலை 4ம் தேதி வரைஉத்திராடம்பலன்கள்வார பலன்கள்வார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்MoolamPooradamUtthiradamPalangalVaara palangalVaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x