Published : 24 Jun 2021 09:58 am

Updated : 24 Jun 2021 09:58 am

 

Published : 24 Jun 2021 09:58 AM
Last Updated : 24 Jun 2021 09:58 AM

மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; ஜூன் 24 முதல் 30ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)


கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், ராகு - தைரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி(வ) - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரக அமைப்பு உள்ளது.

எந்த ஒரு காரியத்தையும் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றல் உடைய மேஷராசியினரே!

நீங்கள் எல்லோராலும் நேசிக்கப்படுவீர்கள். இந்த வாரம் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். அதனால் எந்த ஒரு வேலையைப் பற்றியும் அதிகம் யோசிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும்.

குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை. கடன் விவகாரங்களில் யோசித்துச் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பெண்கள் எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.

பரிகாரம்: முருகப் பெருமானை கந்தசஷ்டி படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும்.
******************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
கிரகநிலை:
ராசியில் புதன், ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) என கிரக அமைப்பு உள்ளது.

நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்த கொள்ளும் ரிஷபராசியினரே!

இந்த வாரம் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். பொருள் வரவு உண்டாகும்.

செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபாரப் போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும்.
சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

கலைத்துறையினருக்கு தொழில் சீராக நடக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி ஏற்படும். பெண்கள் சாதகமான முடிவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு தேர்வு பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்: மகாலட்சுமியை பூஜை செய்து வழிபட பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும்.
******************************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:
ராசியில் சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி(வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், ராகு என கிரக அமைப்பு உள்ளது.

பேச்சாற்றல் மூலம் எப்படிப்பட்ட சிக்கலான காரியங்களையும் சுமுகமாக முடிக்கும் திறமை உடைய மிதுன ராசியினரே!

இந்த வாரம் பொருள் வரவும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணமும் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். செய்தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள்.

குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மனமகிழ்ச்சி கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு தடுமாற்றம் நீங்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

மேஷம்ரிஷபம்மிதுனம்; வார ராசிபலன்கள்; ஜூன் 24 முதல் 30ம் தேதி வரைமிதுனம்வார ராசிபலன்கள்ராசிபலன்கள்பலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்PalangalMeshamRishabamMidhunamVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x