Published : 10 Jun 2021 14:33 pm

Updated : 10 Jun 2021 14:33 pm

 

Published : 10 Jun 2021 02:33 PM
Last Updated : 10 Jun 2021 02:33 PM

மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள்; ஜூன் 10 முதல் 16ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


கிரகநிலை:
ராசியில் சனி(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (அ.சா) - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக அமைப்பு உள்ளது.
இம்மாதம் 10ம் தேதி வியாழக்கிழமை பின்னிரவு 3.26க்கு புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 15ம் தேதி செவ்வாய்கிழமை சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்

இந்த வாரம் சுக்கிரன் சஞ்சாரத்தால் எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.
தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரியத் தடைகள் வரும். வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள்.

அலுவலகப் பணிகளில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தினருக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும்.
பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும்.

மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள்சாதம் வைப்பது உடல் ஆரோக்கியத்தை தரும். கஷ்டங்கள் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன் - வெள்ளி
**********************************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

ராசியில் குரு (அ.சா) - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி(வ) என கிரக அமைப்பு உள்ளது.
இம்மாதம் 10ம் தேதி வியாழக்கிழமை பின்னிரவு 3.26க்கு புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 15ம் தேதி செவ்வாய்கிழமை சூர்ய பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்

இந்த வாரம் கடும் முயற்சிக்குப் பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. சுக்கிரன் சஞ்சாரத்தால் அலைச்சலைச் சந்திக்க நேரிடும்.

பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம்.

தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டுத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது வியாபார மேன்மைக்கு உதவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும்.

பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். பெண்களுக்கு மனக்கவலை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும்.

மாணவர்களுக்கு மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.

பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்குவதால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வெள்ளி
*******************************************************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (அ.சா) என கிரக அமைப்பு உள்ளது.
இம்மாதம் 10ம் தேதி வியாழக்கிழமை பின்னிரவு 3.26க்கு புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

இம்மாதம் 15ம் தேதி செவ்வாய்கிழமை சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்

இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். அறிவுத் திறமை வெளிப்படும்.

உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும்.

வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாகப் பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும்போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது.

வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல்நேரம் உழைக்க வேண்டி இருக்கும்.

கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம் இது. அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சினை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - திங்கள் - வியாழன்
***************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.தவறவிடாதீர்!

மகரம்கும்பம்மீனம் ; வார ராசிபலன்கள்; ஜூன் 10 முதல் 16ம் தேதி வரைமீனம்பலன்கள்வார பலன்கள்வார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்MagaramKumbumMeenamPalangalVaara palangalVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x