Published : 18 Feb 2021 10:09 AM
Last Updated : 18 Feb 2021 10:09 AM

மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; பிப்ரவரி 18 முதல் 24ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

இந்த வாரம் எடுக்கும் காரியங்களில் வெற்றி வந்து சேரும்.

சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவைக் காண முற்படுவீர்கள். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 11ல் இருப்பதால் மனத்தடுமாற்றம் நீங்கும்.
தொழில் ஸ்தானம் நன்றாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது.

குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் பார்க்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை அகலும். பிள்ளைகளிடம் அன்பாகப் பழகுவது நன்மை தரும்.

பெண்களுக்கு அனுகூலமற்ற விஷயங்களைக் கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்விக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: முருகப் பெருமானுக்கு பால் பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வாருங்கள். பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனக்கவலை நீங்கும்.
**********************************************************************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரனின் பாக்கியஸ்தான சஞ்சாரத்தால் பொன் பொருள் சேர்க்கை வரும்.

புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும்போது கவனமாகப் பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டி வரலாம். தொழில் ஸ்தானத்தில் புதன் - சுக்கிரன் இருக்கிறார்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள்.

போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.
கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும்.

பெண்களுக்கு எதைபற்றியாவது நினைத்து கவலைபடுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.
அரசியல்வாதிகளுக்கு எந்த வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி
எண்கள்: 2, 6

பரிகாரம்: அம்மனை வணங்கி வாருங்கள். எல்லாக் காரியங்களும் நல்லபடியாக நடக்கும். மனக்கவலை நீங்கும்.
******************************************************************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் ராசிநாதன் புதன் சஞ்சாரத்தால் நெருக்கடி நிலை அகலும்.

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பயணங்களால் நன்மைகள் ஏற்படும். தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து இதமாகப் பேசுவது நல்லது.

கணவன் மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். செல்வாக்கு உயரும்.

மாணவர்களுக்கு பாடங்களைப் படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன்
எண்கள்: 2, 5
பரிகாரம்: பானகம் அர்ப்பணித்து நரசிம்மரை, பெருமாளை வணங்கி வாருங்கள். முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.
*************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x