Published : 17 Feb 2021 07:16 AM
Last Updated : 17 Feb 2021 07:16 AM
மேஷம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.
ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். கணவன் - மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும்.
மிதுனம்: சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். பண வரவு திருப்தி தரும்.
கடகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
சிம்மம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிக பயணம் ஏற்படும்.
கன்னி: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து பேசி சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லுங்கள். வேலைச்சுமையால் அடிக்கடி கோபப்படுவீர்கள்.
துலாம்: சத்தமேயில்லாமல் சில வேலைகளை கச்சிதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தன்னம்பிக்கை துளிர்விடும்.
விருச்சிகம்: சமூகத்தில் பிரபலமானவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் சில நன்மைகள் ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும்.
தனுசு: அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த அரசு காரியங்கள் முடிவுக்கு வரும்.
மகரம்: கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.
கும்பம்: சகோதரர்களிடையே ஒற்றுமை பிறக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
மீனம்: வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும். அக்கம்பக்கத்தினரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT