Published : 01 Feb 2021 06:58 PM
Last Updated : 01 Feb 2021 06:58 PM

கும்ப ராசி அன்பர்களே! பிப்ரவரி மாத பலன்கள்; திறமை அதிகரிக்கும்; வயிற்றுக் கோளாறு; செல்வம் சேரும்; எதிர்ப்புகள் விலகும்! 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் கேது - விரய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), குரு, சுக்கிரன், சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

10ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி சூரியன் ராசிக்கு மாறுகிறார்.
19ம் தேதி செவ்வாய் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27ம் தேதி சுக்கிரன் ராசிக்கு மாறுகிறார்.

கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கலக்கம் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். எந்தக் காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்றுக் கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மிக நாட்டம், தெய்வ பக்தி அதிகரிக்கும். பிதுரார்ஜித சொத்துகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். அரசாங்க ரீதியிலான பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்களின் நன்மதிப்பிற்கு ஆளாவீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்துச் செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.

பெண்கள் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும்.

கலைத்துறையினருக்கு தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வேலைப்பளு குறையும். உங்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

அரசியல் துறையினருக்கு காரியங்களைச் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். வீண் அலைச்சல், காரியத் தடை, மனக்குழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும். எதிர்ப்புகள் விலகும்.

மாணவர்களுக்கு கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும்.

அவிட்டம்:
இந்த மாதம் திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம். அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படலாம். ஆன்மிக நாட்டம் மனதிற்கு நிம்மதியைத் தரும். குல தெய்வ தலங்களுக்குச் சென்று வருவது மனதிற்கு அமைதியைத் தரும். கணவரின் உடல்நலத்தில் கவனம் தேவை.

ஸதயம்:
இந்த மாதம் உங்கள் வியாபாரத்தை சீரமைப்பதற்கு சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். காரிய அனுகூலம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். உடனிருப்பவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். லாபம் அதிகரிக்கும். விற்பனை அமோகமாகும்.

பூரட்டாதி:
இந்த மாதம் சொந்தங்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் அருகிலிருப்பவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் உண்டாகும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் ஏற்படும். .

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வணங்குவது மனோ தைரியத்தைத் தரும். எதிர்ப்புகள் விலகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
*********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x