Published : 25 Jan 2021 12:53 PM
Last Updated : 25 Jan 2021 12:53 PM

விசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 25 முதல் 31ம் தேதி வரை

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

விசாகம் -

சரியாக திட்டமிட்டு எந்தவொரு காரியத்தையும் செய்தால் எளிதான வெற்றியைக் காணும் வாரம்.

இந்த வாரம் முழுவதும் நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடித்து வெற்றிக்கு வழி வகுத்துக் கொள்ள வேண்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பணவரவு மனநிறைவைத் தரும்.

முயற்சிகளில் எதிர்பாராத அளவிற்கு நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உடல் நல பாதிப்புகளில் முழுமையான குணம் ஏற்படும். தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

சகோதரர்களுடன் விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பக்குவத்தோடு இருக்க வேண்டும். கடன் தொடர்பான பிரச்சினைகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அலுவலக வேலையில் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும். சக ஊழியர்களே உங்களுக்கு தொல்லைகள் தருவார்கள்.

தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட நல்ல விஷயங்கள் நடக்கும். சுய தொழில் தொடங்கும் முயற்சியில் இருக்கும். பெண்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
உங்கள் வேலையை மட்டும் கவனமாகச் செய்யுங்கள். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். தொழில் செய்யும் இடத்திலும் அதிக கவனம் வேண்டும்.

செவ்வாய்-
எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும்.

புதன்-
எண்ணங்கள் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நன்மைகள் நடக்கும். பெண்களுக்கு சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன்-
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். எதிலும் அவசரப்படக்கூடாது. எந்த ஒரு காரியத்திலும் அதிக கவனமாக இருக்கவேண்டும். பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.

வெள்ளி -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நடைபெறும். எதிர்பார்த்த தொழில் முதலீடு கிடைக்கும். சொத்துகள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

சனி-
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சற்று தள்ளிப்போகும். மருத்துவச் செலவுகள் குறையும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதன் மூலமாக செலவுகள் ஏற்படும்.

ஞாயிறு-
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உறவினர்கள் வருகை ஏற்படும். சுப விசேஷங்கள் முடிவாகும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
தட்சிணாமூர்த்தி குரு பகவானை வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும்.
******************

அனுஷம் -

எதிர்பாராத நன்மைகள் நடக்கும் வாரம். வரவும் செலவும் சமமாகவே இருக்கும் வாரம் இது.

எனவே சிக்கனம் அவசியம் தேவை. அதேசமயம் குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.

தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. புதிய நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றவும் வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பங்குவர்த்தகத்தில் இருப்பவர்கள் அளவான முதலீடுகளைச் செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் தங்களின் வியாபார நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு. கலைஞர்களுக்கு புதிய நண்பர்கள் மூலமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். நிதானத்தை இழக்கக்கூடாது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகத்தின் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.

செவ்வாய்-
நேற்றைய பிரச்சிசனைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். பணவரவு சரளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

புதன்-
குழப்பமான மனநிலை தோன்றும். ஆனாலும், எச்சரிக்கை உணர்வு இருப்பதால் கடைசி நேரத்தில் தெளிவாக முடிவெடுப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

வியாழன்-
எடுத்துக் கொண்ட அனைத்துப் பணிகளையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய விசேஷ பேச்சுவார்த்தைகள் நடைபெறும். சுப விசேஷங்கள் முடிவெடுக்கப்படும்.

வெள்ளி-
தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடவேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சனி-
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக இருக்கும். கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். வங்கியில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். முக்கியமான நபர்களின் சந்திப்பு ஏற்படுவதால் மன மகிழ்வு ஏற்படும்.

ஞாயிறு-
நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் சாதகமான பதில் கிடைக்கும். நண்பர்கள் மூலம் வியாபார விஷயங்களில் ஆதாயங்கள் கிடைக்கும். கமிஷன் மற்றும் தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு குறிப்பிடத் தகுந்த வருமானம் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியை வணங்குங்கள். அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
****************

கேட்டை -

நிதானத்தோடு செயல்பட்டு எந்த ஒரு காரியத்தையும் சாதித்துக் கொள்ளும் வாரம் இது.

அவசர முடிவுகள் எடுக்காமல் இருக்க வேண்டும். பணவரவு தாராளமாக இருக்கும். ஒரு சில விஷயங்களில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும், குறிப்பாக சொத்து சம்பந்தமாக ஏற்பட்டிருந்த தகராறுகள் நீங்கும்.

சகோதரர்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாக பிரச்சனையை தீர்க்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் அதன் பாதிப்பு தெரியாது.

தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய கிளைகளை ஆரம்பித்தல், வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவது போன்ற செயல்களில் இறங்கி வெற்றி காண்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சகோதர ஒற்றுமை மேலோங்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
திட்டமிட்ட காரியங்களிலும் திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும்.

செவ்வாய்-
பணவரவு சரளமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன்-
தாமதப்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சிறிய அளவிலான சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான விஷயங்கள் நடக்கும். பெண்களுக்கு முக்கியமான கடன் பிரச்சினை ஒன்று தீர்வதற்கு வழி கிடைக்கும்.

வியாழன்-
வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அதற்கான முயற்சிகளில் இன்று இறங்குவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வாகன மாற்றுச் சிந்தனை ஏற்படும். மனதில் கடந்த சில நாட்களாக இருந்த குழப்பங்கள் இன்று முடிவுக்கு வரும்.

வெள்ளி-
எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சனி-
பயணங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். வீண் விரயங்கள் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் வேண்டும்.

ஞாயிறு-
சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் பற்றிய நல்ல தகவல் இன்று உறுதியாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு செய்யுங்கள். வாராஹி மூல மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x