Published : 22 Nov 2020 21:16 pm

Updated : 22 Nov 2020 21:16 pm

 

Published : 22 Nov 2020 09:16 PM
Last Updated : 22 Nov 2020 09:16 PM

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 23 முதல் 29ம் தேதி வரை) 

vaara-natchatira-palangal

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

பூரட்டாதி -


நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.
வேலையில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். திருமண முயற்சிகள் கைகூடும். சகோதர வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நன்மைகள் அதிகப்படியாக கிடைக்கக்கூடிய நாள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பண உதவி இன்று கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றியைத் தரும். முயற்சி எடுக்காத விஷயங்கள் கூட இப்பொழுது தானாக முடியும். நீண்ட நாளாக பேசி வந்த ஒரு பிரச்சினை இன்று பேசி முடிவு எடுக்கப்படும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய விஷயங்களில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும்.

புதன் -
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உதவிகள் தேடிவரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தூரத்து உறவினர் ஒருவரால் நன்மைகள் நடைபெறும்.

வியாழன் -
எதிர்கால சிந்தனை அதிகரிக்கும். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பலவித வாய்ப்புகள் தேடிவரும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

வெள்ளி -
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஒரு சில உதவிகளைச் செய்து கொடுப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சுப விசேஷங்கள் பற்றிய நல்ல தகவல் உறுதியாகும்.

சனி -
செலவுகள் அதிகமாக இருக்கும். மருத்துவச் செலவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. எதிலும் நிதானமாகவும் கவனமாகவும் இருந்தால் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கலாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது.

ஞாயிறு -
நன்மைகள் அதிகமாக நடக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். ஆரோக்கியக் குறைபாடுகள் தீரும். மருத்துவச் செலவு குறையும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மனை வணங்குங்கள். குறைகள் தீரும். நன்மைகள் நடக்கும்.
*******************

உத்திரட்டாதி -

அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் வாரம்.

எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மனநிம்மதியும் மன நிறைவு தரக்கூடிய வாரமாக இருக்கும்.

சொந்த வீடு வாங்குவது, ஆடை ஆபரணங்கள் சேரும் என அனைத்தும் சிறப்பாக இருக்கும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மிகப் பெரிய காரியங்களை எளிதாகச் செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது வரும்.

தொழில் வளர்ச்சி நம்பிக்கைத் தரும். தேவையான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாகும்.
குழந்தைகளைப் பற்றிய கவலை நீங்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

செவ்வாய் -
நிதானம் அவசியம். பயணங்கள் ஏதும் செய்ய வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். யாரிடமும் எதற்காகவும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

புதன் -
எடுத்துக் கொண்ட அனைத்துச் செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன் -
அலுவலகப் பணியில் பணிச்சுமை கூடும். கடுமையாக உழைத்து வேலைகளை முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

வெள்ளி -
வியாபாரத்தில் லாபம் இருக்கும். தொழிலுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தரும். திருமணம் உள்ளிட்ட சுப விசேஷ நிகழ்வுகள் முடிவாகும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

சனி -
நன்மைகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். நெருங்கிய நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்களுடைய பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

ஞாயிறு -
பயணங்களைத் தவிர்க்க வேண்டும். நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம். குடும்பத்தாருடனும் நண்பர்களிடமும் பொறுமையாகப் பேசுங்கள். நிதானத்தை இழக்க வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் -
தட்சிணாமூர்த்தி குரு பகவானை வழிபாடு செய்யுங்கள்.அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
*********************

ரேவதி -

இந்த வாரம் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

இதுவரை தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் எளிதாக முடியும். வருமானம் திருப்தி தருவதாக இருக்கும். இதுவரை விற்க முடியாமல் இருந்தால் சொத்துகள் இப்போது விற்பனையாகும்.

சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் தொடரும். அடகு வைத்த நகைகளை திரும்பவும் மீட்க வழி கிடைக்கும்.
உத்தியோகத்தில் மனத் திருப்தி உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். ஒருசிலருக்கு புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சிறு தொழில்களை செய்யும் ஆர்வம் ஏற்படும்.

திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். குறிப்பாக நண்பர்கள் பலவிதத்திலும் உங்களுக்கு உதவிகரமாக இருந்து வாய்ப்புகளைப் பெற்றுத் தருவார்கள்.

இந்த வாரம் -
திங்கள் -

பலவித நன்மைகள் நடைபெறக்கூடிய நாளாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகளில் மனநிறைவு உண்டாகும்.

செவ்வாய் -
எந்தவொரு விஷயத்தையும் பொறுமையாகக் கையாளவும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

புதன் -
எதிர்பாராத உதவிகள் கிடைக்க கூடிய நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றத்தையும் காணலாம். புதிய ஒப்பந்த வாய்ப்புகளும் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். தொலைபேசி வழியாக கிடைக்கக்கூடிய செய்தி மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

வியாழன் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்போது திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சிகள் முடிவாகும். புத்திர பாக்கியம் தொடர்பான செய்து மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

வெள்ளி -
அதிக நன்மைகள் நடைபெறும். சுப காரிய பேச்சுகள் மனதிற்கு நிறைவைத்தரும். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும். தரகு தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.

சனி -
ஆதாயம் தரும் வியாபார வருவாய் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

ஞாயிறு -
வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சிறிய அளவிலான மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. சற்றே செலவுகள் அதிகமாக ஏற்படக்கூடிய நாளாக இருக்கும்

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அன்னையை வணங்குங்கள். நன்மைகள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

பூரட்டாதிஉத்திரட்டாதிரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 23 முதல் 29ம் தேதி வரை)ரேவதிவார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்PoorattadhiUtthiratadhiRevathiVaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x