Published : 01 Oct 2020 18:58 pm

Updated : 01 Oct 2020 18:58 pm

 

Published : 01 Oct 2020 06:58 PM
Last Updated : 01 Oct 2020 06:58 PM

மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள் (அக்டோபர் 1 முதல் 7ம் தேதி வரை)

vaara-rasipalan

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம்

(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

இந்த வாரம் வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும்.

எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சினைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். பெண்களுக்கு பண விவகாரங்களில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

அரசியல் துறையினருக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். மாணவர்களுக்கு எதையும் நன்கு யோசித்து பின்னர் செயலாற்றுவது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு
எண்கள்: 5, 6, 9
நிறங்கள்: நீலம், பச்சை
பரிகாரம்: கோளறு பதிகம் படிப்பது. சிவன் கோயிலுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது மகத்தான பலன்களைக் கொடுக்கும்.

********************

கும்பம்

(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கலக்கம் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்.

எந்தக் காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்றுக் கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
ஆன்மிக நாட்டம், தெய்வ பக்தி அதிகரிக்கும். பிதுரார்ஜித சொத்துகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்களின் நன்மதிப்பிற்கு ஆளாவீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்துச் செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். கலைத்துறையினருக்கு தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

அரசியல் துறையினருக்கு காரியங்களைச் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிரமப்பட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடக்கு
எண்கள்: 5, 6
நிறங்கள்: வெள்ளை, பச்சை
பரிகாரம்: வியாழக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வணங்குவது மனோ தைரியத்தை தரும். எதிர்ப்புகள் விலகும்.
*********************************************


மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இந்த வாரம் வீண்குழப்பம், காரியத் தடை ஏற்பட்டு நீங்கும்.

வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவனத்தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.
தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். மேலிடத்தில் இருந்து வந்த கசப்பு உணர்வு மாறும்.

ராஜாங்க ரீதியாக பயணம் செல்ல வேண்டி வரலாம். குடும்பத்தில் இருந்து வந்த டென்ஷன் குறையும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை.

தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம். பல வழிகளிலிருந்து பணம் வரும்.

பெண்களுக்கு திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும்.

அரசியல் துறையினருக்கு சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, மேற்கு
எண்கள்: 3, 9
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
பரிகாரம்: முன்னோர்கள் வழிபாடும் சித்தர்கள் வழிபாடும் நன்மை தரும்.
*****************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

மகரம்கும்பம்மீனம் ; வார ராசிபலன்கள் (அக்டோபர் 1 முதல் 7ம் தேதி வரை)மீனம்வார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்Vaara rasipalan

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author