Published : 20 Sep 2020 02:39 PM
Last Updated : 20 Sep 2020 02:39 PM

புனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21 முதல் 27ம் தேதி வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

புனர்பூசம் -

பெருமளவு நன்மைகள் நடைபெறும் வாரம்.

எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். இதுவரை குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சலசலப்புகள் மறையும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும்.
பணி நிமித்தமாக பிரிந்து இருந்தவர்களும் இப்போது ஒன்றுசேர்வார்கள். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்போது குழந்தை பாக்கியம் உண்டாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு இந்த வாரம் அந்த முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

பணியிலிருந்த அழுத்தங்கள் விலகும். எதிர்பாராத பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பாக எதிர்பார்த்த பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும்.

வியாபாரம் படிப்படியான வளர்ச்சி ஏற்படும். நிதி மேலாண்மை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும்.

மாணவர்கள் கலைகள் சம்பந்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் பேசி தீர்க்கப்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும். சற்றும் எதிர்பாராத கமிஷன் வியாபாரம் ஒன்று முடிவாகி பெரிய தொகை கைக்கு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைக் கையாளுவீர்கள். புதிய வியாபார வாய்ப்புகளும் கிடைக்கும். பெண்கள் தாங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

செவ்வாய் -
எந்த ஒரு விஷயத்திலும் அதிக கவனம் தேவை. அலட்சியமாக இருக்க வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஆதங்கமும் எரிச்சலும் அதிகமாகும். பொறுமையாக இருக்க வேண்டும்.

புதன் -
ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு அது தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட விஷயங்களுக்கு தேதி குறிக்கும் வாய்ப்பு உள்ளது.

வியாழன் -
குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதம் ஆகலாம். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடியுங்கள். அநாவசிய செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளி -
முடிக்க வேண்டிய காரியங்களை சரியாக திட்டமிட்டு செய்து முடிக்கக்கூடிய நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாகி அவர்கள் மூலமாக நன்மைகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

சனி -
முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சக்தி வடிவான அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்யுங்கள். அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி, குங்கும அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
****************

பூசம் -

தேவையான உதவிகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும்.

மனக் குழப்பங்களும் மனபாரமும் தீரும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அழுத்தம் தந்து கொண்டிருந்த கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். சொத்துக்கள் விற்பது தொடர்பான விஷயங்கள் அனைத்தும் உங்களுக்குச் சாதகமாக இருக்கும்.

அலுவலகப் பணியில் இருந்த அச்ச உணர்வு நீங்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். அல்லது தற்போது இருக்கும் தொழிலை விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகளும் ஏற்படும்.
புதிய தொழில் அல்லது வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும்படியாக தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் புதிய கல்வி கற்கும் ஆர்வமும், புதிய மொழிகளைக் கற்கும் ஆர்வமும் ஏற்படும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனநிறைவு ஏற்படும் நாள்.வியாபாரம் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

செவ்வாய் -
குடும்ப நலன் கருதி ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் இயல்பான நிலையே தொடரும். அலுவலகப் பணிகளில் கூடுதல் சுமை ஏற்பட்டாலும் சமாளித்து வேலைகளைச் செய்வீர்கள். தொழில் தொடர்பான சந்திப்புகளால் முக்கிய ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

புதன் -
தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும்.

வியாழன் -
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுய தொழில் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு பணி தொடர்பான வாய்ப்பு உறுதியாகும்.

வெள்ளி -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணியை பகிர்ந்து கொள்ள வேண்டியது வரும். எதிர்பார்த்த பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் மனக் குழப்பங்கள் ஏற்படும். எந்த விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சனி -
சொத்து தொடர்பான பிரச்சினைகளில் நல்ல முடிவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுங்கள்.எந்த ஒரு பிரச்சினைகளிலும் தலையிட வேண்டாம். அமைதியும் தியானமும் மிக மிக முக்கியம். சர்ச்சைக்குரிய விஷயங்களை பேச வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
*******************

ஆயில்யம் -

எதிர்பாராத அதிக நன்மைகள் ஏற்படும் வாரம்.

இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இனி எளிதாக முடியும். அலுவலகத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை சலுகைகளும், பதவி உயர்வு உள்ளிட்டவைகளும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். தாயார் மற்றும் தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்புக்கு மாறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பெண்களுக்குச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நன்மைகள் நடைபெறும் வாரமாக இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள், கலைஞர்களுக்கு சக நண்பர்கள் மூலமாக வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையின் முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

செவ்வாய் -
நண்பர்களால் அதிக உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

புதன் -
மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று நிதானமாக இருக்க வேண்டும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி -
தேவையற்ற பயணங்கள் வேண்டாம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தேவையில்லாத சர்ச்சை பேச்சு வார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். குழந்தைகளிடம் அன்பு பாராட்டுங்கள். வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத வார்த்தை போர் வைத்துக்கொள்ள வேண்டாம்.

சனி -
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் சமாதானம் ஆகும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிவாகும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் தொல்லை குறையும்.

ஞாயிறு -
குழந்தைகளின் கல்வி பற்றிய அக்கறை தோன்றும். அவர்களின் கல்வி தொடர்பான விஷயங்களில் புதிய முயற்சிகள் எடுப்பீர்கள். வீட்டில் தேவையில்லாத பொருட்கள் அனைத்தையும் ஒதுக்கி வைப்பீர்கள். பழுதான பொருட்களை சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவீர்கள். தேவையான செலவுகளும். தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடிய நாடாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
கால பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள், நன்மைகள் அதிகமாகும்.
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x