Published : 30 Jun 2020 09:54 am

Updated : 30 Jun 2020 09:54 am

 

Published : 30 Jun 2020 09:54 AM
Last Updated : 30 Jun 2020 09:54 AM

மிதுன ராசிக்காரர்களுக்கு... ஜூலை மாத பலன்கள்

midhunam-july-palan

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மிதுனம்:
இந்த மாதம் கொடுக்கல்வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். வரவேண்டிய பண பாக்கிகள் வசூலாகும்.
குடும்பத்தில் உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டு அனுசரித்துச் செல்வார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள். தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்கு சமம்பிரதாயங்களிலும் நாட்டம் அதிகரிக்கும்.
தொழிலில் புதிய வழிகளில் லாபம் கொட்டும். பால் வியாபாரத்தாலும், கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும். வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீர் வரத்து நன்றாக இருப்பதால் விவசாயத்தில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் தூரதேசம் பயணம் எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை உத்தரவாதம் கிடைக்கும். வேலை வாய்ப்பினை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும்.
பெண்கள் தாய் மற்றும் தாய் வழி உறவினர்கள் மூலம் பாசமும் அன்பும் கிடைக்கப் பெறுவீர்கள். அழகிய பெரிய வீடு மற்றும் விலை உயர்ந்த வாகனம் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். செல்வாக்கு உயரும். சொன்ன சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள்.
கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இருக்காது. அடுத்தவர் விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போக வாய்ப்புகள் உண்டு.
அரசியல்துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.
மாணவர்களுக்கு தேர்வில் நல்ல தேர்ச்சி கிடைக்கும். கனவுகளில் நேரத்தை செலவிடாதீர்கள். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவீர்கள்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் எல்லாக் கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும். பணவரத்து சீராக இருக்கும். வேலைப் பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். கை கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சினை தீரும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
திருவாதிரை:
இந்த மாதம் அக்கம்பக்கத்தினரிடம் சில்லறைச் சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். சகோதரர்களிடம் கவனமாகப் பேசி பழகுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்கள் மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றைக் கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சினைகள் அதனால் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். பெண்கள் பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.
பரிகாரம்:
ஸ்ரீமஹாவிஷ்ணுவை பூஜித்து துளசி மாலை சாற்றி வழிபடுங்கள். ஏழைகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்து வாருங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
சந்திராஷ்டம தினங்கள்: 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

மிதுன ராசிக்காரர்களுக்கு... ஜூலை மாத பலன்கள்மாத பலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்மிதுனம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author