Published : 07 Jun 2020 06:35 PM
Last Updated : 07 Jun 2020 06:35 PM

மூலம், பூராடம், உத்திராடம் ;  வார நட்சத்திர பலன்கள் (ஜூன் 8 முதல் 14 வரை) 


’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மூலம் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
அதேசமயம் செலவுகளும் அதிகம் ஏற்படும். ஆனால் அது சுப செலவுகளாக இருக்கும். எனவே கவலைப்பட வேண்டியதில்லை. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் நடக்கும்.
வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடக்கும். வேலையில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்கள் தாங்கள் செய்யும் எந்தச் செயலிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கணவர், கணவர் வழி உறவினர்களிடம் கவனமாக பேச வேண்டும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும் நாள். வருமானம் இருமடங்காக இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றியைத் தரும். அதிக முயற்சி எடுக்காத விஷயங்கள் கூட இப்பொழுது தானாக முடியும். நீண்ட நாளாக பேசி வந்த ஒரு பிரச்சினை இன்று பேசி முடிவு எடுக்கப்படும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.

புதன் -
தேவைகள் பூர்த்தியாகும். உதவிகள் தேடிவரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தூரத்து உறவினர் ஒருவரால் நன்மைகள் நடைபெறும்.

வியாழன் -
செலவுகள் அதிகம் ஏற்படும் நாள். அதிலும் எதிர்பாராத செலவுகள் அதிகமாக இருக்கும். சிக்கனம் தேவை. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி -
நண்பர்களுக்கு ஒரு சில உதவிகளை செய்து கொடுப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஒரு சில உதவிகள் கிடைக்கும்.

சனி -
பயணங்கள் செய்ய வேண்டாம். செலவுகள் அதிகமாக இருக்கும். மருத்துவச் செலவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. எதிலும் நிதானமாகவும் கவனமாகவும் இருந்தால் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கலாம்.

ஞாயிறு -
நன்மைகள் அதிகமாக நடக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் தீரும். மருத்துவச் செலவு குறையும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.
***********************


பூராடம் -
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும். எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.
ஆரோக்கியத்தில் ஒரு சிலருக்கு பிரச்சினைகள் வரும். மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு நோய் நீங்கும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி நம்பிக்கை தரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
பெண்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட உதவிகள் கிடைக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர் காலச் சிந்தனைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவதில் முன்னுரிமை தருவீர்கள். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சீராக இருக்கும்.

செவ்வாய் -
எடுத்துக் கொண்ட அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

புதன் -
நிதானமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டக் கூடாது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
தொழில் தொடர்பாக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒருசில முதலீடுகள் செய்யும் எண்ணம் தோன்றும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

வெள்ளி -
வியாபாரத்தில் லாபம் இருக்கும். தொழிலுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவுக்கு வரும். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

சனி -
நன்மைகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும். இதுவரை இருந்த மனவருத்தங்கள் அகலும்.

ஞாயிறு -
பயணங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம். நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம். குடும்பத்தாருடனும் நண்பர்களிடமும் பொறுமையாக பேசுங்கள். நிதானத்தை இழக்க வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானை தரிசனம் செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களாலான உதவிகளைச் செய்து வாருங்கள். அன்னதானம் செய்வது நல்ல பலன்களை தரும்.
***********************


உத்திராடம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். எ
ளிதான காரியங்களாக எடுத்துக்கொண்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். இளைய சகோதரர்களால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களுடன் ஏற்பட்டிருந்த சொத்து சம்பந்தமான பிரச்சினைகளை மிக எளிதாக இந்த வாரம் பேசித் தீர்த்துக் கொள்வீர்கள்.
உத்தியோகத்தில், செய்கின்ற வேலைகளில் மனத் திருப்தி உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.
பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சிறு தொழில்களை செய்யும் ஆர்வம் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு நண்பர்கள் மூலமாக ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் தீரும்.

இந்த வாரம் -

திங்கள் -
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய நாள். பணவரவு சரளமாக இருக்கும். ஒரு சிலருக்கு சுபச் செலவுகள் ஏற்படும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் உதவி செய்வார்கள்.

செவ்வாய் -
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து தீர்வு ஏற்படும். பண வரவு உண்டு. குடும்பத்திற்காக அத்தியாவசிய செலவு செய்ய வேண்டியதிருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

புதன் -
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கவனமாகப் பேசுங்கள். கோபத்தை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்போது திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சிகள் முடிவாகும்.

வெள்ளி -
அதிக நன்மைகள் நடைபெறும்.சுபகாரிய பேச்சுக்கள் மனதிற்கு நிறைவைத்தரும். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

சனி -
தொழில் தொடர்பான ஒரு சில பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். ஆதாயம் ஏற்படும் ஒரு வியாபார வருவாய் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

ஞாயிறு -
அதிகப்படியான உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான முக்கிய நபர்களின் சந்திப்பால் உற்சாகம் பிறக்கும். சிறு தூரப் பயணம் ஒன்று ஏற்படும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சக்தி வடிவான அம்மன் வழிபாடு செய்யுங்கள். லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்.நீர்மோர் தானம் செய்யுங்கள். நன்மைகள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
***********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x