Published : 22 Mar 2020 01:10 PM
Last Updated : 22 Mar 2020 01:10 PM

புனர்பூசம், பூசம், ஆயில்யம்; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!  வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 23 முதல் 29 வரை) 

புனர்பூசம், பூசம், ஆயில்யம்; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்!
வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 23 முதல் 29 வரை)

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


புனர்பூசம்-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.
உத்தியோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பணிச்சுமை கூடும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி காண்பார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
பெண்கள் தாங்கள் எடுக்கின்ற தொழில் தொடர்பான முயற்சியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். கணவர் வீட்டார் அனுசரணையாக இருப்பார்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருந்தாலும் கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும், ஆனாலும் அதில் ஒரு சில நிர்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள்-
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக செயல்பட்டு ஒப்பந்தங்கள் போடுவீர்கள். ஒரு சில விஷயங்களில் முடிவுகளை எடுப்பதற்கு முன் தீவிரமாக ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம், வளர்ச்சி உண்டாகும் வியாபாரம் அமோகமாக இருக்கும். லாபம் பெருகும்.

புதன்-
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம் அலுவலகத்திலும் பணி செய்யும் இடத்திலும் கவனமாக இருக்க வேண்டும், சற்று கூடுதல் கவனத்தோடு எச்சரிக்கை உணர்வுடன் இருந்தால் இந்த நாளை எளிதாக கடக்கலாம்.


வியாழன்-
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வியாபார பேச்சுவார்த்தைகள் லாபகரமாக இருக்கும்.

வெள்ளி-
வியாபாரம் தொடர்பான சந்திப்புகள் சாதகமாக இருக்கும். பணவரவு தாமதமாகும். உறவினர்கள் வருகை ஏற்படும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். ஒரு சில ஆடம்பரச் செலவுகள் ஏற்படும்.

சனி -
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒரு உதவி கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும்.கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

ஞாயிறு -
சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். வியாபார பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு அதிக நன்மைகளை ஏற்படுத்தித் தரும்.பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபடுங்கள்.எதிர்ப்புகள் காணாமல் போகும், நன்மைகள் அதிகமாகும்.
**************************************************************

பூசம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். அரசின் உதவிகள் கிடைக்கும். பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். திரைத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பணவரவு இருமடங்காக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

புதன் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். செலவுகள் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரிடம் தேவையில்லாமல் கோபத்தையும், எரிச்சலையும் காட்டாதீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருங்கள். ஆலய வழிபாடு மன அமைதி தரும்.

வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். நன்மைகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

வெள்ளி -
வீண் செலவுகள் ஏற்படும்.பராமரிப்பு செலவுகள் கூடுதலாகும். அலுவலகத்தில் சக ஊழியருக்கு உதவி செய்வீர்கள். தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்துவிடுங்கள்.

சனி-
தொழில் தொடர்பான முக்கிய பிரச்சினை சுமுகமாக முடிவடையும். நில வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.

ஞாயிறு-
புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளை கருத்து கூறாமல் இருப்பது நல்லது. வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நாளாக இருப்பதால் நண்பர்களுடன் வெளியில் செல்ல வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம்-
தட்சிணாமூர்த்தி குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, கொண்டைக் கடலை நிவேதனம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும், நினைத்தது நிறைவேறும்.
***************************************************

ஆயில்யம்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். தொல்லை தந்து கொண்டிருந்த சக ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறுவார்கள். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும்.
இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
பெண்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமண முயற்சிகள் கைகூடும். தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.

செவ்வாய் -
வேலை இல்லாதவர்களுக்கு இப்பொழுது வேலைக்கான அழைப்பு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக வெளிநாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

புதன் -
எதிர்பாராத பண வரவு உண்டாகும்.தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும் முக்கியமான பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சிறிய கடன்களை ஒருசிலவற்றை அடைப்பீர்கள். இல்லத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.

வியாழன் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும் தொழில் தொடர்பாக, அல்லது வியாபாரத்திற்காக வங்கிக் கடன் கிடைக்கும்.

வெள்ளி -
உங்கள் பணிகளை மட்டும் கவனித்து வாருங்கள். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்கள் வேலையை செய்ய வேண்டியது வரும். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள்.ஒரு சில ஆடம்பர செலவுகள் ஏற்படும்.

சனி-
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி சேமிப்பு போன்றவற்றை தொடங்கும் எண்ணம் ஏற்படும்.

ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். லாபம் தரும் ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் மகா விஷ்ணுவை வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
**********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x