Published : 01 Mar 2020 12:32 PM
Last Updated : 01 Mar 2020 12:32 PM

இந்த வாரம் இப்படித்தான்! வார  நட்சத்திர பலன்கள் - (மார்ச் 2 முதல் 8ம் தேதி வரை) ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

இந்த வாரம் இப்படித்தான்! வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 2 முதல் 8ம் தேதி வரை) ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -
பலவிதமான நன்மைகள், நீங்கள் நினைத்தது போல நடக்கும்.

உங்கள் தேவைகள் எதுவாயினும் உடனுக்குடன் பூர்த்தியாகும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.


ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். இதுவரை வேலையில்லாத பெண்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தினருடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
மனதில் புதுப்புது எண்ணங்கள் தோன்றும் புதிய முயற்சிகளில் ஈடுபட ஆர்வம் பிறக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளை முயற்சி செய்து பார்ப்பீர்கள். வியாபாரம் லாபகரமாக இருக்கும்.

செவ்வாய்-
நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

புதன்-
நிதானமாக செயல்பட்டு காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். உறவினர்கள் வருகை ஏற்படும். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். பணியிடத்தில் நிதானத்தை இழக்காமல் இருக்க வேண்டும்.

வியாழன்-
பாதியில் நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொகுதிகள் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாகும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் ஞாபக வளர்ச்சி சீராக இருக்கும். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது, புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி-
வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் கூடும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். வீடு மாற்றம், இடமாற்றம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

சனி-
இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தொழில் தொடர்பாக புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றி காண்பீர்கள்.
மாணவர்கள் கல்வி தொடர்பாக உதவிகள் கிடைக்கப் பெறுவார்கள். பெண்களுக்கு சொத்துக்கள் சம்பந்தமாக சாதகமான நிலை ஏற்படும்.

ஞாயிறு-
குடும்பத்தினரோடு நேரத்தை செலவழியுங்கள். உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். நண்பர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். செலவுகளை கட்டுப்படுத்த சிக்கனம் மிக மிக அவசியம். முக்கியமான பயணங்கள் ஏதும் இருந்தால் தவிர்த்துவிடுங்கள். வியாபார பேச்சுவார்த்தைகளை தள்ளி வையுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள், நன்மைகள் பெருகும்.
***********************************************************


மிருகசீரிடம் -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இந்த வாரம் கிடைக்கும்.

தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். ஒருசிலருக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடை தாமதங்கள் மாறும். தாயாரின் உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.


வியாபாரம் அமோகமாக இருக்கும். லாபம் பெருகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் உண்டாகும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்,சொத்து சேர்க்கை உண்டாகும்.

இந்த வாரம்-

திங்கள்-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த முக்கியமான உதவி இன்று கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய்-
எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும் நாள். முயற்சிகள் வெற்றியாகும். அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் தொடர்பான பயணம் ஏற்படும்.

புதன்-
தொல்லை தந்த பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அயல்நாடு செல்லும் முயற்சி சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஒப்பந்தங்கள் நிறைவேறும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

வியாழன்-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பயணங்கள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலைகளை சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த சந்திப்பு தள்ளிப்போகும். பெண்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும். ஆபரண சேர்க்கையும் உண்டு.

வெள்ளி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பாரத அளவுக்கு தாராளமாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான வியாபாரங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும்.தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

சனி-
வீண் செலவுகள் ஏற்படும், நண்பர்களால் சங்கடங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவ செலவு உண்டு. பயணங்களை தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு-
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதிக அளவில் நன்மைகள் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் நடக்கும்.எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
***********************************************************************


திருவாதிரை-
வரவும் செலவும் சமமாக இருக்கும் வாரம். ஆனாலும் கவலை வேண்டாம். அனைத்தும் சுபச்செலவுகளாகவே இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தினருக்காக செலவு செய்து மகிழ்வீர்கள்.


அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும், கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், இறுதியில் வெற்றி கிடைக்கும்.


வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். சொத்து சேர்க்கை உண்டு, மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாட்டு நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் இன்று கிடைக்கும். இடமாற்றம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அது தொடர்பான தகவல் உறுதியாகும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். இல்லத்திற்கு உறவினர்கள் வருகை ஏற்படும்.

செவ்வாய்-
வேலை தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பெரிய அளவிலான பண உதவி கிடைக்கும்.

புதன்-
எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். கடன் பிரச்சினை நினைத்து கவலைப்படுவீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து சேமிப்புகள் தொடங்கும் எண்ணம் ஏற்படும். வேறு வேலைக்கு மாறும் சிந்தனை வரும்.

வியாழன்-
லாபகரமான நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் இடமாற்றம் தொடர்பான தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

ஞாயிறு-
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி ஆகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்ப்புகள் விலகி போகும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். வேலைக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை சூட்டி, நெய் தீபமேற்றி வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும், எதிர்ப்புகள் இல்லாமல் போகும், நினைத்தது நிறைவேறும்.
*****************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x