Published : 23 Feb 2020 12:24 PM
Last Updated : 23 Feb 2020 12:24 PM

இந்த வாரம் இப்படித்தான்; வார நட்சத்திரப் பலன்கள் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை)      - மகம், பூரம்,உத்திரம், - 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


இந்த வாரம் இப்படித்தான்; வார நட்சத்திரப் பலன்கள் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை)
- மகம், பூரம்,உத்திரம்

- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மகம்-
குலதெய்வ வழிபாடு செய்ய குடும்பத்தோடு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அலுவலகத்தில் மதிப்பு,மரியாதை உயரும். பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.


வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி காண்பார்கள். புதிய வியாபார கிளைகளை தொடங்குவார்கள்.தொழில் வளர்ச்சி அபாரமாக இருக்கும். புதிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும்.


குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு விரும்பிய கல்வி கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவடைந்து ஒப்பந்தங்கள் போடுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

செவ்வாய்-
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகத்திலும் பணி செய்யும் இடத்திலும் கவனமாக இருக்க வேண்டும். போக்குவரத்தில் கவனம் வேண்டும். வாகனப் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.

புதன்-
எதிர்பாரத நன்மைகள் நடக்கும். வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் உண்டாகும். நிலம் வீடு தொடர்பான வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். குழந்தை பாக்கியம் உறுதியாகும். வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.

வியாழன்-
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வியாபார பேச்சுவார்த்தைகள் லாபகரமாக இருக்கும். பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பாக முக்கிய பயணம் ஏற்படும்.

வெள்ளி-
ஆலய வழிபாடு செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை ஏற்படும்.குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். குழந்தைகளின் கல்விக்காக பயிற்சி வகுப்புகள் போன்ற ஏற்பாடுகளை செய்வீர்கள்.

சனி -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். நண்பர்களால் உதவிகள், ஆதாயங்கள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒரு உதவி கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
குடும்பத்தோடு நேரத்தை செலவழியுங்கள். பயணங்கள் வேண்டாம். வியாபார சந்திப்புகள் ஏமாற்றம் தரும். செலவுகள் அதிகம் உண்டாகும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு செய்யுங்கள். எலுமிச்சை மாலை சாற்றுங்கள். சோதனைகள் காணாமல் போகும். நன்மைகள் அதிகமாகும்.
**********************************************************************

பூரம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆனால் யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் வாக்குறுதி தராதீர்கள். வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும்.


வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாக இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். பங்கு வர்த்தக துறையில் எதிர்பாராத அளவுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.


திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உயர் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். திரைத்துறை சார்ந்த கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பணவரவு இருமடங்காக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

புதன் -
மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். பணியிடத்தில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதையோ இழந்தது போல் தவிப்பீர்கள். இறை வழிபாடு மன அமைதி தரும்.

வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். நன்மைகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

வெள்ளி -
சுப செலவுகள் ஏற்படும். வியாபாரம் வளர்ச்சியடையும். புதிய கிளைகள் தொடங்க வழி கிடைக்கும். வங்கிக்கடன் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தம் ஏற்படும்.

சனி-
கடன் தொடர்பான பிரச்சினை சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.

ஞாயிறு -
முழுமையான வெற்றிகள் கிடைக்கும் நாள். நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும். பண வரவு தாராளமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சொந்த வீடு வாங்குதல், தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படுதல், வியாபாரத்தில் அவர் வேண்டிய பங்கு கிடைத்தல் என அனைத்தும் வெற்றியாகும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சக்தி வடிவான அம்மன் ஆலயத்துக்குச் சென்று வாருங்கள். அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும், நினைத்தது நிறைவேறும்.
*****************************************************************

உத்திரம்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான கௌரவம் கிடைக்கும். மதிப்பு மரியாதை உயரும். பதவி உயர்வு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும்.


இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.


பங்கு வர்த்தகத்தில் லாபம் இரு மடங்காக இருக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படும். பெண்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமண முயற்சிகள் கைகூடும். தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் தொடர்பான தகவல் உறுதியாகும். வேலையில்லாதவர்களுக்கு வேலையில் சேருவதற்கான தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

செவ்வாய் -
உறவினர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டியது வரும். அலுவலகத்தில் அடுத்தவர். வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டிவரும். வியாபார பேச்சுவார்த்தைகள் நீண்டு கொண்டே போகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த தகவல் தாமதமாகும்.

புதன் -
எதிர்பாராத பண வரவு உண்டாகும்.தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும் முக்கியமான பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கடன்களில் ஒருசிலவற்றை அடைப்பீர்கள். இல்லத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.

வியாழன்-
எந்த வேலையிலும் உங்களின் முழு கவனம் இருக்கட்டும். கடன் வாங்கக்கூடாது. குடும்பத்தாருடனும், தெரியாத நபர்களிடமும் வீண்வாதம் செய்ய வேண்டாம். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

வெள்ளி-
நன்மைகள் அதிகமாக நடக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். சுப விசேஷங்கள் முடிவாகும். பணவரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

சனி-
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். சிறு தூரப் பயணம் மேற்கொண்டு அதில் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். லாபம் தரும் ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
சிவ பெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து தீபமேற்றி வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
***************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x