Published : 23 Feb 2020 10:24 am

Updated : 23 Feb 2020 10:24 am

 

Published : 23 Feb 2020 10:24 AM
Last Updated : 23 Feb 2020 10:24 AM

இந்த வாரம் இப்படித்தான்; வார நட்சத்திரப் பலன்கள் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை)     - 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

indha-vaaram-ippadithan


இந்த வாரம் இப்படித்தான்; வார நட்சத்திரப் பலன்கள் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை)

- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


- அஸ்வினி, பரணி, கார்த்திகை

அசுவினி-
வருமானம் பல மடங்காக இருக்கும். ஆனால் மனதில் சஞ்சலம் தோன்றும். எதிர்காலம் பற்றிய சிந்தனை வாட்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும்.


இதுவரை வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி சாதகமாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.


குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வீடு மனை தொடர்பான சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும். புதிய வீடு வாங்கும் முயற்சி சுமுகமாக முடியும்.


கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வருமானத்திற்கு குறை இருக்காது. முக்கியமான கடன்கள் அடைபடும். பெண்கள் தாங்கள் எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரிகளுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும்.

செவ்வாய்-
அலைச்சல்களும் அதனால் உடல் அசதியும் ஏற்படும். சிறிய அளவிலான மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். நெருக்கடிகள் தோன்றும். தொழில் தொடர்பான சந்திப்புகள் தாமதமாகும்.

புதன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடுகளில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த முதலீடுகள், ஒப்பந்தங்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

வியாழன்-
கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அடகு வைத்த நகைகளை மீட்க வழி கிடைக்கும். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்

வெள்ளி -
முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். தாமதமாகிக்கொண்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.பெண்களுக்கு சொத்து சேர்க்கை, ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். குடும்ப உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள்.

சனி -
பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாளாக சந்திக்க நினைத்துக் கொண்டிருந்த ஒரு நபரை இன்று சந்திப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். கடைகள் வணிக நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய கிளைகளை தொடங்கும் சிந்தனை உருவாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

ஞாயிறு-
தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் போடுவதில் அதிக கவனம் வேண்டும், முடிந்தால் ஒப்பந்தங்கள் போடுவதை தள்ளி வையுங்கள். வியாபாரத்தில் கடன் தொடர்பான சங்கடங்கள் உருவாகும். அலுவலகத்தில் நெருக்கடிகள் ஏற்படும்

வணங்கவேண்டிய தெய்வம் -
விநாயகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். விநாயகருக்கு வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். ஆரோக்கியம் மேம்படும்.அனைத்தும் வெற்றியாகும்.
*********************************************************************

பரணி -
பண வரவுகளால் மன நிறைவு உண்டாகும். புதிதாகத் தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பணவரவு மட்டுமல்லாமல் புதிய தொழில் ஒப்பந்தங்களும் கிடைக்கும்.


திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும்.


சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இந்த வாரம் அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். கலைஞர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் தீரும்.மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் செலவுகள் உண்டு.

புதன்-
வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். நீண்ட நாள் மனதை வருத்திக் கொண்டிருந்த கடன் பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். ஆலயவழிபாடு ஏற்படும். நண்பர்களுடனான தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
சிறப்பான பலன்கள் நடைபெறும் நாள். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடிவடையும். ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

சனி-
தேவையற்ற பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
மகாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். வருமானம் பெருகும். பிரச்சினைகள் தீரும்.
****************************************************************************

கார்த்திகை-
நன்மைகள் பலவாறாக நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.வருமானம் இருமடங்காக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.


அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி முழு வெற்றியைத் தரும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெண்களுக்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுய தொழில் தொடர்பான விஷயங்களில் ஆதரவு கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.


பழைய நகைகளை விற்று புதிய நகைகளாக மாற்றுவீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் மற்றும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.

புதன்-
அலுவலக வேலையாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் ஏற்படும். வியாபார வளர்ச்சியும் லாபமும் அமோகமாக இருக்கும். சுபகாரியப் பேச்சுவார்த்தை சுபமாக முடியும்.

வியாழன்-
நல்ல சம்பவங்கள் அதிகமாக ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தைத் தரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

வெள்ளி-
குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

சனி-
சகோதரர்களுடன் மனம்விட்டுப் பேசி முக்கியமான பிரச்சினைகளில் தீர்வு காண்பீர்கள். அலுவலக வேலைகளில் இருந்த சுணக்கமான நிலை மாறி, எளிதாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

ஞாயிறு-
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். வாகனப் பழுது சரி செய்வீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்வீர்கள் அல்லது புதிதாக மாற்றி வாங்குவீர்கள். செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
மகாலக்ஷ்மி வழிபாடு செய்யுங்கள். தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும்.
**********************************************************************

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

இந்த வாரம் இப்படித்தான்; வார நட்சத்திரப் பலன்கள் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை)     - 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்இந்த வாரம் இப்படித்தான்‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author