Published : 16 Feb 2020 11:24 AM
Last Updated : 16 Feb 2020 11:24 AM

இந்த வாரம் இப்படித்தான்! வார நட்சத்திர பலன்கள் - (பிப்ரவரி 17 முதல் 23ம் தேதி வரை) புனர்பூசம், பூசம், ஆயில்யம் - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


இந்த வாரம் இப்படித்தான்! வார நட்சத்திர பலன்கள் - (பிப்ரவரி 17 முதல் 23ம் தேதி வரை) புனர்பூசம், பூசம், ஆயில்யம் - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


புனர்பூசம் -
நன்மைகள் அதிகமாக ஏற்படும் வாரம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.


தொழிலில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் அபாரமான வளர்ச்சி ஏற்படும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அளவுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.


பெண்களின் தேவைகள் பூர்த்தியாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கலைஞர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


ஒருசிலருக்கு அயல்நாடுகளில் கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலர் தங்கள் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் தொடங்குவார்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
வீண் செலவுகள் ஏற்படும்.எனவே சிக்கனமாக இருப்பது அவசியம். குடும்பத்தோடு ஆலயங்களுக்குச் சென்று வரும் எண்ணம் ஏற்படும்.அலுவலகத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் எழும், அமைதியாகக் கடந்து செல்லுங்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேச வேண்டும்.

செவ்வாய்-
சொத்து வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

புதன்-
எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படும். வாய்ப்பு உள்ளது தொழில் தொடர்பாக இயந்திரப் பழுது ஏற்படும் .அதற்காக செலவு செய்ய வேண்டிவரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் குறையும்.

வியாழன்-
இதுவரை வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் திருப்திகரமாக இருக்கும்.

வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் .வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். கடன் தொடர்பான விஷயங்கள் சுமுகமாகத் தீரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும்.

சனி-
ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். பயணங்களால் லாபம் கிடைக்கும்.

ஞாயிறு -
தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றத்தை தரும். பணவரவு தாராளமாக இருக்கும். நீண்டநாளாக சந்திக்க முடியாமல் இருந்த நபரை இன்று சந்திப்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
அபிராமி அந்தாதியை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகம் நடைபெறும். தேவைகள் பூர்த்தியாகும்.நினைத்தது நிறைவேறும்.
****************************************************************

பூசம் -
எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் தாமதப்பட்டுக் கொண்டிருந்த சலுகைகள் கிடைக்கும்.


தொழிலில் எதிர்பாராத லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பெண்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும்.


குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக மருத்துவச் செலவு செய்து கொண்டிருந்தவர்களுக்கு இனி மருத்துவச் செலவு தேவைப்படாது. மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள்
அற்புதமான பலன்கள் நடைபெறும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

செவ்வாய்-
அலைச்சல் அதிகமாக ஏற்படும். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் ஆர்வம் ஏற்படும். நண்பர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.


புதன் -
அலுவலகத்தில் அடுத்தவர் வேலையை பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பாக முக்கியமான நபர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவீர்கள். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளின் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.

வியாழன் -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

வெள்ளி -
தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் .ஒப்பந்தங்கள் ஏதும் கையெழுத்து இடுவதாக இருந்தால் தள்ளி வையுங்கள். அல்லது முழுமையாகப் படித்து ஆலோசித்த பிறகு கையெழுத்து இடுங்கள். வாழ்க்கைத் துணையிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

சனி-
சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாகவே இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் வேண்டிய உதவிகள் கிடைக்கும். லாபம் இருமடங்காக இருக்கக்கூடிய நாள்.

ஞாயிறு -
வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும் முக்கியமான நபரை சந்திப்பதால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வருமானம் இருமடங்காக இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
சித்தர்களின் ஜீவசமாதி சென்று வாருங்கள். நன்மைகள் அதிகமாகும்.எதிர்ப்புகள் குறையும். மன அமைதி உண்டாகும்.
*********************************************************

ஆயில்யம் -
நன்மைகள் நடைபெறும் வாரம் . தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் பெருமளவில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.


வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வருமானம் எதிர்பாராத அளவுக்கு இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழிலுக்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும்.குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தினருக்காக முக்கியமான செலவுகளை செய்வீர்கள்.

செவ்வாய்-
நன்மைகள் அதிகமாக நடைபெறும். தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.

புதன்-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாகனப் பழுது வீட்டு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும். தொழில் செய்யும் இடத்தில் இயந்திரங்களை பாதுகாப்பாகக் கையாள வேண்டும்.

வியாழன்-
அதிக நன்மைகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.தந்தையின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக தீரும். பெண்களுக்கு ஆபரணங்களை புதிதாக மாற்றும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி-
உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் சற்று தள்ளிப் போகலாம்.

சனி-
எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். மற்றவர்கள் உங்களை கோபப்படுத்திப் பார்ப்பார்கள். மனதில் தேவையில்லாத குழப்பங்கள் உண்டாகும். அமைதியாக இருப்பது நல்லது. ஆலயங்களுக்குச் சென்று வருவது மன அமைதி தரும்.

ஞாயிறு -
வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும் . வெளிநாடுகளில் வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.சுபகாரிய விஷயங்களுக்காக எடுக்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
காவல் தெய்வங்களாக இருக்கக்கூடிய அய்யனார், கருப்பசாமி போன்ற தெய்வங்களை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
*****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x