Published : 03 Feb 2020 05:35 PM
Last Updated : 03 Feb 2020 05:35 PM

இந்த வார நட்சத்திர பலன்கள் (பிப்ரவரி 3 முதல் 9 வரை) திருவோணம், அவிட்டம், சதயம்

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

திருவோணம்-
நினைத்தது நிறைவேறும் வாரம். பணவரவு சரளமாக இருக்கும்.சொந்த வீடு வாங்கும் முயற்சி முழு வெற்றி தரும். நெருக்கடி தந்து கொண்டிருந்த கடன்கள் படிப்படியாக தீரும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் மாறும். நண்பர்கள் உங்களுக்கு தாமாக முன் வந்து உதவுவார்கள். தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும்.வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்.இழந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். மன ஒற்றுமை ஏற்படும். சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த கலைஞர்களுக்கு இப்பொழுது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் புதிய உத்வேகம் பெறுவார்கள். கல்வியில் நல்ல முனைப்போடு கவனம் செலுத்துவார்கள். தொழில் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சுமுகமாக தீரும்.

இந்த வாரம் -

திங்கள்-
உற்சாகமான மனநிலை இருக்கும். பணியிடத்தில் சிறப்பாக பணி செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
குலதெய்வ வழிபாடு செய்யும் எண்ணம் வரும். ஆன்மீக பெரியவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நல்ல தகவல் ஒன்று கிடைக்கும்.

புதன்-
பலவித நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இடம் பூமி சம்பந்தப்பட்ட வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

வியாழன்-
பயணங்கள் அதிகமாக ஏற்படும். அதன் காரணமாக செலவுகளும் ஏற்படும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். வீட்டு உபயோகப் பொருட்களில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

வெள்ளி-
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் பழைய ஆபரணங்களை விற்று புதிய ஆபரணங்கள் வாங்குவார்கள்.

சனி-
நீண்ட நாளாக முடிக்காமல் இருந்த அலுவலக வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான சந்திப்புகளில் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும்.

ஞாயிறு-
பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்வீர்கள். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட நாளாக வராமலிருந்த பணத்தை கடுமை காட்டி வசூலிப்பீர்கள். நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்திப்பீர்கள்.

வணங்கவேண்டிய தெய்வம்-
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். பிரச்சினைகள் தீரும் மனதில் நம்பிக்கை பிறக்கும்.
***********************************************************


அவிட்டம்-
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும். மனதை வருத்திக் கொண்டிருந்த கடன் பிரச்சினைகள் படிப்படியாக தீரும். வேறு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கல்வித் தகுதிக்கு தகுந்த வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும், சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக இருக்கும். கலைஞர்களுக்கு இதுவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாய்ப்புகள் இனி வரிசையாக கிடைக்கும்.வியாபாரம் வளர்ச்சி அமோகமாக இருக்கும். லாபம் இருமடங்காக ஏற்படும். தொழிலில் புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

இந்த வாரம் -

திங்கள்-
சிறு தூர பயணம் ஏற்படும். நண்பர்கள் அல்லது உறவினர்கள் உதவிகள் எதிர்பார்த்து வருவார்கள். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.அலுவலகத்தில் இயல்பான நிலையே நீடிக்கும்.

செவ்வாய்-
வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். புதிதாக கடை அல்லது சிறு நிறுவனங்கள் ஆரம்பிக்க தகுதியான இடம் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகளை பேசி சமாளித்து தேவையான கால நீட்டிப்பு பெறுவீர்கள்.

புதன்-
ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஒப்பந்தங்கள் ஏற்படும். பத்திரிக்கையாளர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். புதிய பயிற்சி வகுப்புகளில் சேரும் எண்ணம் ஏற்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வியாழன்-
அதிக நன்மைகள் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான தேவையான உதவிகள் கிடைக்கும். அடகு நகைகளை மீட்க வாய்ப்பு உண்டு.

வெள்ளி-
உங்களுக்கு தொடர்பு இல்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் தேவையற்ற சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள்.உயரதிகாரிகளின் பேச்சுக்கு கட்டுப்படுங்கள்.

சனி-
வெளிநாடுகளில் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பெண்களுக்கு சகோதரரால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பேச்சுவார்த்தைகள் இன்று முடிவுக்கு வரும்.

ஞாயிறு-
எதிர்பார்த்துக் கொண்டிருந்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படும். அரசு வழியில் இருந்த ஒரு சில சிக்கல்களை தீர்ப்பதற்கு உதவிகள் கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். அம்மனின் அபிஷேகத்திற்குப் பால் மற்றும் பன்னீர் வாங்கித் தாருங்கள். அதிக நன்மைகளை பெறுவீர்கள்.
********************************************************


சதயம்-
தேவைகள் அனைத்தும் எளிதாக பூர்த்தியாகும் வாரம். பணவரவுகள் தாராளமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.வெளிநாடு செல்லும் முயற்சி சாதகமாக இருக்கும். இல்லத்தில் சுப விசேஷங்கள் தொடர்பான விஷயங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். கலைஞர்களுக்கு பலவிதமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்ததைவிட தாராளமாக இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முழு வெற்றி கிடைக்கும். வருமானம் தரக்கூடிய வியாபாரம் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.வணிக ரீதியாக புதிய ஏஜென்சி, டீலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.

செவ்வாய்-
அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும். மருத்துவ செலவுகள் ஏற்படும்.தினசரி செலவுகளில் கூடுதல் செலவு ஏற்படும்.

புதன்-
இடம் பூமி தொடர்பான வியாபார தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இன்று பத்திரப் பதிவுகள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. இல்லத்தில் சுப காரியங்கள் சம்பந்தமான விஷயங்கள் முடிவு எடுக்கப்படும். சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை அனைவருக்கும் அதிக அளவில் லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.

வியாழன்-
ஆலயங்களுக்குச் சென்று வர வாய்ப்பு உண்டாகும். குழந்தைகளின் கல்வியால் பெருமைப்படுவீர்கள். மனதளவில் நினைத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை இன்று செயல்படுத்திப் பார்க்க முயற்சி செய்வீர்கள்

வெள்ளி-
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி-
அலுவலக விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும். தொழில் தொடர்பான ஒரு நம்பிக்கையான நபரை சந்தித்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இல்லத்திற்கு உறவினர்கள் வருகை உண்டு. சகோதர வழியில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

ஞாயிறு-
வெளிநாடு தொடர்புடைய விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். அயல்நாட்டில் வேலை பெறுவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராகி அம்மனுக்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடந்தே தீரும்.
**************************************************

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x