Published : 29 Dec 2019 11:38 AM
Last Updated : 29 Dec 2019 11:38 AM

2020 - நட்சத்திர பலன்கள் : உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கான பலன்கள்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

உத்திரட்டாதி:


பிரச்சினைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளைச் செய்து பக்குவமான அணுகுமுறையால் வெற்றி காணும் உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே!


நீங்கள் சனி பகவானை நட்சத்திர நாயகனாகவும் குரு பகவானை ராசிநாதனாகவும் கொண்டவர்கள்.


இந்த வருடம் நல்ல யோகமான பலன்களைப் பெறப் போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.


தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாகப் பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.


குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள்.


பெண்களுக்கு : காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும்.


கலைத்துறையினருக்கு : தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தைக் குறைத்து தன்மையாகப் பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.


அரசியல் துறையினருக்கு : தேவையற்ற அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யத் தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.


மாணவர்களுக்கு : வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறைய கூடும். நன்கு படிப்பது நல்லது. பெற்றோர் ஆதரவு பெருகும். வெளிநாடு சம்பந்தமான படிப்புகளுக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.

பரிகாரம்: குலதெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.


மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்திற்கு 71% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.


+: பணவரத்து நன்றாக இருக்கும்.


-: நண்பர்கள் - உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை.


************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x