Published : 16 Dec 2019 04:24 PM
Last Updated : 16 Dec 2019 04:24 PM

இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி (டிசம்பர் 16 முதல் 22-ம் தேதி வரை)


- ஜோதிடர் ஜெயம் சரவணன்

பூரட்டாதி -
எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு இப்பொழுது முழுமையாக நிறைவேறும் அதற்கான உதவிகள் அனைத்தும் கிடைக்கும் வீட்டுக் கடன் தொடர்பான வங்கிக் கடன் கிடைக்கும். இதுவரை வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலர் வேலையை விட்டு விட்டு சொந்த தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவார்கள். அந்த முயற்சி வெற்றி தரும். .

உத்தியோகம் -

எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் சகஜமான நிலையே நீடிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. அலுவலகத்தில் இயல்பான நிலையே நீடிக்கும்.
சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சுயமாக தொழில் செய்யும் முயற்சியில் இறங்குவார்கள்.

தொழில் -

தொழிலில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். மந்தமாக இருந்த தொழில் வளர்ச்சி இப்பொழுது சூடுபிடிக்கும். உற்பத்தியான பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த ஒப்பந்தம் இந்த வாரம் ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையினருக்கு அமோகமான வளர்ச்சி ஏற்படும். கட்டுமானத் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் சலுகைகளை அறிவித்து வியாபாரத்தை பெருக்குவீர்கள்.வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சியைக் காண்பார்கள். புதிய ஏஜென்சி எடுக்க இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.

பெண்களுக்கு -

உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது பதவி உயர்வு கிடைக்கும். புத்திரபாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். அசையாச் சொத்து வாங்கும் யோகம் உண்டு. சொந்த தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு இந்த வாரம் தொழில் தொடங்குவதற்கான அத்தனை வாய்ப்புகளும் கிடைக்கும்.

மாணவர்களுக்கு -

வெளிநாடு சென்று கல்வி பயில ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இப்போது அதற்கான உதவிகள் கிடைக்கும்.புதிய மொழி கற்கும் ஆர்வம் ஏற்படும். அதற்கான பயிற்சி வகுப்புகளில் சேருவீர்கள்.

கலைஞர்களுக்கு -

நல்ல வாய்ப்புகள் இப்போது உங்களைத் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

பொதுப்பலன் -

உங்கள் செயல்களில் புதிய உற்சாகம் ஏற்படும். அயராமல் உழைத்து முன்னேற்றம் காண்பீர்கள்.தேவையான உதவிகள் அனைத்தும் சரியான நேரத்தில் கிடைக்கும் இதுவரை சொந்த வீடு இல்லாதவர்கள் இப்போது சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இறங்குவார்கள்.வேலைக்குச் சென்று கொண்டிருப்பவர்கள். இப்போது சுயமாக தொழில் தொடங்கும் எண்ணம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பாக சில உபாதைகள் ஏற்படலாம் ஆனாலும் பாதிப்புகள் ஏதும் இருக்காது. குறிப்பாக மூட்டு வலி, உடல் சூடு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலைச்சல் அதிகமாக இருக்கும். மற்றவர்கள் செய்கின்ற செயல்கள் உங்களுக்கு எரிச்சல் தருவதாக இருக்கும். பொறுமை அவசியம்.

செவ்வாய் -
சந்திராஷ்டம தினம். பொறுமையாக இருக்கவேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடாது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

புதன் -
வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். ஒப்பந்தங்கள் போடுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும்.

வியாழன் -
தொழில் விஷயமாக எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். இடம், வீடு சம்பந்தமான வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். நீண்டநாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும்.புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.

வெள்ளி -
உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.குடும்பத்தில் தேவையில்லாத சலசலப்பு ஒன்று ஏற்படும்.

சனி-
ஆதாயம் தரக்கூடிய வியாபார விஷயம் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள்.

ஞாயிறு -
தொலைபேசி வழியாக நல்ல தகவல் கிடைக்கும், அது உங்கள் வேலை சம்பந்தமாக இருக்கும். வியாபார பேச்சுக்கள் சாதகமாக இருக்கும், ஒப்பந்தங்கள் போடுவீர்கள். ஆதாயம் இருமடங்காக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும் பொருளாதார பிரச்சினைகள் தீரும்.
**************************************************************


உத்திரட்டாதி -

அதிக முயற்சி எடுத்தால், எடுத்துக்கொண்ட வேலைகள் எளிதாக முடியும். அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் குறையாது.சொத்து விற்பனை சம்பந்தமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.தாயாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும்.

உத்தியோகம் -
வேலையில் அழுத்தங்கள் அதிகமாக இருக்கும் வேறு வேலை தேடும் முயற்சி செய்வீர்கள். வெளிநாட்டில் வேலை தேடும் முயற்சிக்கு இந்த வாரம் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள்.அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இப்போது வேலை செய்யும் நிறுவனத்தை விட வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றியாகும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் வளர்ச்சி இப்போது ஏற்படும் தொழில் சார்ந்த கடன்கள் அனைத்தும் தீர்வதற்கு வழி வகை கிடைக்கும் வங்கியில் கடன் பெற்று புதிய தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாகும்கட்டுமான தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றத்தையும் காண்பார்கள் ரியல் எஸ்டேட் மற்றும் கமிஷன் ஏஜெண்டுகள் வருமானம் திருப்திகரமாக இருக்கும் பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்கள் சிறிய அளவிலான முதலீடுகள் செய்து பெரிய லாபத்தை பெறுவார்கள் வியாபாரிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள் புதிய கிளைகளைத் துவங்குவது மற்றும் புதிய ஏஜென்சி களை எடுப்பது போன்றவை ஏற்படும்.

பெண்களுக்கு -
உங்கள் பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தினர் மட்டுமல்லாமல் அக்கம்பக்கத்தினருடன் சுமூகமாகப் பழகுங்கள். சமூகவலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

மாணவர்களுக்கு -
கல்வியைத் தவிர மற்ற அனைத்து ஆடம்பர விஷயங்களிலும் நாட்டம் ஏற்படும். எனவே மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கலைஞர்களுக்கு -
புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து வரும். உங்கள் துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் ஆரம்பிக்க இது உகந்த நேரம். அயல்நாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைக்கப்படுவீர்கள்.


பொதுப்பலன் -
ஆண் பெண் இருபாலரும் சமூக வலைதள பயன்பாட்டில் இருந்து ஒதுங்கி இருங்கள். உங்கள் கருத்துக்களை சொல்கிறேன் என்று வீண் பிரச்சினைகளில் சிக்க வேண்டாம்.வேலை இல்லாதவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும்.திருமண முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரும், வந்த வேகத்தில் மறையும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் மலர் மாலை சூட்டி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனம் அமைதி பெறும்.

******************************************************

ரேவதி -
உங்களுடைய தேவைகள் அனைத்தும் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பணவரவு ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அழுத்தங்கள் அதிகமாக இருக்கும். சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். சொந்த வீடு வாங்கும் முயற்சி முழு வெற்றியைத் தரும்.

உத்தியோகம் -
பணிச்சுமை அதிகமாக இருக்கும். நேரம் கடந்தும் வேலையை செய்ய வேண்டியது வரும். ஒருசிலருக்கு வீட்டிற்கு சென்ற பின்பும் கணினி மூலமாக வேலையைப் பார்க்க வேண்டியதிருக்கும்.அரசு ஊழியர்களுக்கு சகஜமான நிலையே இருக்கும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.கடைகளில் வேலை செய்பவர்களும், சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் தங்கள் பணி இடத்தை மாற்றும்படி கோரிக்கை வைப்பீர்கள், அந்த கோரிக்கை ஏற்கப்படும்.

தொழில் -
தொழிலில் எதிர்பார்த்ததற்கும் மேலாக வளர்ச்சி உண்டாகும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிதாக தொழில் செய்யும் எண்ணமுடையவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
சேவை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். பணி ஒப்பந்தங்கள் ஏற்படும்.கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும்.


பெண்களுக்கு -
உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் விஷயங்களில் கருத்து கூற வேண்டாம். சமூக வலைதள பயன்பாட்டை அளவோடு பயன்படுத்துங்கள். புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் கவனச்சிதறல் ஏற்படும். எனவே மனக் கட்டுப்பாடு தேவை. சக மாணவர்களோடு இணைந்து படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

கலைஞர்களுக்கு -
நீண்டநாளாக பேச்சுவார்த்தையில் இருந்த ஒரு விஷயம் ஒப்பந்தமாக மாறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பரின் உதவியால் வாய்ப்பு ஒன்றை பெறுவீர்கள்.

பொதுப்பலன் -
உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அலுவலகத்திலும், தொழில் செய்யும் இடத்திலும், அக்கம்பக்கத்தினருடனும் அனுசரித்துச் செல்ல வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஒருசிலருக்கு கால் பாதத்தில் வெடிப்பு, புண் போன்றவை ஏற்படலாம்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுக்கு குடும்பத்தினரும் ஒத்துழைப்பு தருவார்கள்.குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சுப விசேஷம் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

செவ்வாய் -
நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழிலுக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

புதன் -
அலைச்சல்கள் அதிகரிக்கும். வாகனப் பழுது ஏற்படும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள்.

வியாழன் -
சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். உங்கள் மனதிற்குப் பிடித்த மாதிரியான வீடு அமையும். ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபாரங்கள் நல்லபடியாக முடியும்.

வெள்ளி -
நண்பர்களுக்கு ஒரு சில உதவிகள் செய்து தருவீர்கள். அது வேலைக்கான பரிந்துரையாகவும் இருக்கலாம். ஆலய வழிபாடு செய்வீர்கள்.

சனி -
கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு வழி கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள். லாபகரமான வியாபாரம் ஒன்று பேசி முடிப்பீர்கள்.

ஞாயிறு -
பயணங்கள் எதுவும் வேண்டாம். நண்பர்களுடன் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.அனாவசியமான செலவுகள் ஏற்படும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாருக்கு வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து நெய் தீபமேற்றி வழிபடுங்கள். தடைகள் அகலும், நன்மைகள் பெருகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x