Published : 03 May 2024 05:10 AM
Last Updated : 03 May 2024 05:10 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: யோகா, தியானம் பயில, தோல் நோய், பூச்சிக் கடிக்கு மருந்துண்ண, வாழை, கரும்பு நட, வேத பாராயணம், ஜெபம் பூர்த்தி செய்ய, அன்னதானம் செய்ய நல்ல நாள். ராகுகாலத்தில் மாரியம்மன் கோயில்களில் எள் அல்லது நெய் தீபம் ஏற்றினால் தடைகள் விலகும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சிவஸ்துதி, மகாலட்சுமி அஷ்டோத்திரம், அன்னபூர்ணாஷ்டகம், ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம் ஆகியவற்றை படித்து வந்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

மேஷம்: முகப்பொலிவுடன் காணப்படுவீர். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகள் வந்திறங்கும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும். சக ஊழியரிடம் இணக்கமான போக்கை கடைபிடிப்பது நல்லது.

ரிஷபம்: குற்றம் குறை கூறியவர்கள் இனி வலிய வந்து பேசுவர். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சி மேற்கொள்வீர். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: பழைய சொத்துப் பிரச்சினைகளை இப்போது கையில் எடுக்க வேண்டாம். உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபம் வந்து போகும். நண்பர்கள் சிலர் உங்களை அலட்சியப்படுத்துவார்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழி விலகும். பொறுப்புகள் கூடும்.

சிம்மம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சில வேலைகளை முடிப்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. இதுவரை உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரிகள், இனி உதவிகரமாக இருப்பார்கள்.

கன்னி: முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கி கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும். புதிய திட்டத்துக்கு தலைமை பொறுப்பேற்பீர்கள்.

துலாம்: மனதிலிருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தாயாருக்கு இருந்து வந்த அசதி, சோர்வு நீங்கும். விருந்தினர் வருகை உண்டு. பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். மனைவிவழி உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில்ரீதியாக சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.

தனுசு: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வாகனம் செலவு வைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பண வரவால் மன நிம்மதியுண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மகரம்: பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் உதவுவர். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். யோகா, தியானம், ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவர். அந்தஸ்து உயரும்.

கும்பம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் இழுபறியில் முடியும். பிள்ளைகளின் நடவடிக்கையை கவனிக்கவும். புதிய பங்குதாரருடன் சேர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவர். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.

மீனம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயமுண்டு. முகப் பொலிவு கூடும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை விலகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பது நல்லது.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x