Published : 02 May 2024 05:18 AM
Last Updated : 02 May 2024 05:18 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: வீடு, மனை, வாகனம் விற்க, பசுக்கள் வாங்க, கெமிக்கல் வியாபாரம் தொடங்க, சொத்து சிக்கல் பேசி முடிக்க, பட்டா வாங்க, அரசு அதிகாரிகளை சந்திக்க நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்தால் நன்மை உண்டு. நவக்கிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தடைகள் விலகும். சித்தர் சமாதியில் தியானம் செய்வதாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் மன அமைதி கிட்டும்.

மேஷம்: வெளியூரில் இருந்து மனதுக்கு இதமான செய்திகள் வரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வராது என்றிருந்த பணம் வந்து சேரும். புதிய பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைச் சுமை குறையும்.

ரிஷபம்: மனஇறுக்கம் நீங்கி முகப்பொலிவுடன் காணப்படுவீர் கள். சொத்து தொடர்பாக குடும்பத்தில் நிலவி வந்த குழப் பங்கள் விலகும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். வியாபாரம் படிப்படியாக சூடு பிடிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு, உயரும்.

மிதுனம்: திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். பணியாட்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

கடகம்: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்காது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். தாயார், மனைவியின் உடல்நலத்தில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினரின் செயல்பாடுகள் கோபம் தருவதாக அமையும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செல்லவும்.

சிம்மம்: குடும்பத்தாருடன் கலந்து பேசி, பூர்வீக சொத்து விஷயமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். வியாபாரம் லாபம் தரும். புதிய தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.

கன்னி: தொலை நோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு சில பிரச்சினைகளை முடிப்பீர்கள். தம்பதிக்குள் இருந்து வந்த சந்தேகம் விலகும். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய படிப்பில் சேர்ப்பது நல்லது. புதிய பங்குதாரர்கள் உதவியுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர் கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

துலாம்: சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய வழக்குகள் சாதகமாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வங்கியில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும். புதிய பொறுப்புகள் கூடும்.

விருச்சிகம்: எதிர்பார்த்து காத்திருந்த தொகை வந்து சேரும். பூர்வீக சொத்து தொடர்பாக நீண்ட நாளாக இருந்த குழப்பம் தீர்ந்து, குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோ
சனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். வியா பாரத்தில் அணுகுமுறையை மாற்றி அமைப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

தனுசு: எதையும் திட்டமிட்டு செய்யவும். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனதை வாட்டும். நீங்கள் வேடிக்கையாக பேசியது, தவறாக புரிந்து கொள்ளப்படும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் கடுமையான பணிச் சுமை இருக்கும்.

மகரம்: அலுவலக வேலைச் சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு ஏற்படும். குடும்பத்தாரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வாகனம் செலவு வைக்கும். புதிய வீடு வாங்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.

கும்பம்: பூர்வீக சொத்து தொடர்பாக அவசர முடிவுகள் வேண்டாம். பிள்ளைகளின் படிப்பு குறித்தும் தீவிரமாக யோசித்து செயல்படவும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் அலைந்து திரிந்து பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.

மீனம்: எதையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளின் சாதனைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x