Published : 19 Apr 2024 05:06 AM
Last Updated : 19 Apr 2024 05:06 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: தனிநபர் கடன் பைசல் செய்ய, சொத்து விஷயங்கள் பேசித் தீர்க்க, வியாபாரக் கணக்கு முடிக்க, ஹோமங்கள் நடத்த, மின் சாதனங்கள் வாங்க, கழனி, காடுகளை சீர்திருத்தம் செய்ய நல்ல நாள். ராகுகாலத்தில் மாரியம்மன் கோயில்களில் தீபம் ஏற்றினால் தடைகள் விலகும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சிவஸ்துதி, மகாலட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீதேவி கட்கமாலா ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் படித்து வந்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

மேஷம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் வரும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். வருமானத்தை பெருக்க வழி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி உண்டு.

ரிஷபம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புது முயற்சிகளின் வெற்றி காண்பீர்கள். கணவன் -மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் விலகும். வீண் அலைச்சல் குறையும். பூர்வீக விட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரரீதியாக வெளியூர் செல்வீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மிதுனம்: குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். கௌரவப் பதவிகளும் தேடி வரும். திருமணம், கிரகப்பிரவேசம் என்று இல்லத்தில் மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும். பங்குதாரர்களின் முயற்சியால் வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பர்.

கடகம்: இல்லத்தில் அடிப்படை வசதிகள் பெருகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் அறிமுகம் உண்டு.

சிம்மம்: குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் மனம் விட்டுப்பேசி சிறு சிறு கருத்துமோதல் வந்தாலும் சமாளிப்பீர். உடல் சோர்வு, அலைச்சல் வந்து போகும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது. பங்குதாரர்களுடன் சேர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் அந்தஸ்து உயரும்.

கன்னி: தடைபட்டுக் கொண்டிருந்த மகளின் திருமணம் கைகூடி வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பூர்வீக சொத்தை அதிக செலவு செய்து சீரமைப்பீர். பங்குதாரர்களை அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் இணக்கமாக இருப்பர்.

துலாம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

விருச்சிகம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து இனி வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்து நடக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம்.

தனுசு: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வர். முகத்தில் தேஜஸ் கூடும். பழைய வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியால் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்

மகரம்: காரியத்தடைகள், அலைச்சல் வந்துப் போகும். குடும்பத்தினரால் வீண் செலவு உண்டு. தேவையற்ற மனக் குழப்பங்கள் இருக்கும். எதிலும் நிதானமாக செயல்படுவது அவசியமாகிறது. உறவினர் வருகை மனதுக்கு ஆறுதல் அளிக்கும். வியாபாரத்தில் மேன்மை உண்டு. அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்க்கவும்.

கும்பம்: பழைய நினைவுகளை நினைத்து அசை போடுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்களிடம் அன்பாக இருப்பர். புதிய வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியால் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும்.

மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x