Published : 16 Apr 2024 05:10 AM
Last Updated : 16 Apr 2024 05:10 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: வாகனம் வாங்க, விற்க, விளையாட்டு, உடற்பயிற்சி, அழகு சாதனங்கள் வாங்க, தரகு வியாபாரம் தொடங்க, ரகசிய ஆலோசனைகள் நடத்த நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

மேஷம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர். வீட்டில் பழுதான மின்னணு பொருட்களை மாற்றுவீர். பழைய வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இணக்க மான போக்கை கடைபிடித்தால் வெற்றியுண்டு.

ரிஷபம்: உறவினர், நண்பர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். தாயார், மனைவியின் உடல் நிலை சீராக அமையும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும்.

மிதுனம்: தடைபட்டுவந்த காரியங்கள் அனைத்தும் சுமுகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வாகனம் செலவு வைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரரீதியாக பங்குதாரர்களுடன் சில பிரபலங்களை சந்திக்க நேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கடகம்: அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு, செரிமானக் கோளாறு வந்து செல்லும். வாகனத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்: வங்கியில் அடமான வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் வெற்றி பெற புது வழிமுறைகளை கையாளுவீர்கள். அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

கன்னி: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். புதியவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களிடம் இணக்கமாக செல்லவும். அலுவலகத்தில் இழுபறியான வேலைகளை, சக ஊழியர்களின் உதவியுடன் முடிப்பீர்.

துலாம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பழைய வழக்குகள் சாதகமாகும். உடன்பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். உயரதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள்.

விருச்சிகம்: நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். தாயார், மனைவியின் உடல்நலம் சீராகும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இணக்கமான போக்கை கடைபிடியுங்கள்.

தனுசு: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாள வேண்டும். நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் மேன்மை உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு தருவர்.

மகரம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பழைய வழக்குகள் சாதகமாகும். வாகனம் செலவு வைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.

கும்பம்: புத்திசாலித்தனமாக நடந்துக் கொள்வீர்கள். மனதில் தெளிவு பிறக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர். வெளியூர் பயணங்களால் உற்சாகமடைவீர். மனைவிவழி உறவினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் உயரதிகாரியுடனான மனக்கசப்பு நீங்கி, நன்மை உண்டு.

மீனம்: மனக்குழப்பம் நீங்கி பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். புதிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். புதிய பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x