Published : 27 Mar 2024 05:15 AM
Last Updated : 27 Mar 2024 05:15 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: சீமந்தம் செய்ய, குழந்தைக்கு காது குத்த, அன்னம் ஊட்ட, வாகனம் வாங்க, வங்கிக் கடன் பெற, புனித நீராட்டு விழா நடத்த, மிருதங்கம், இசை பயில, அதிகாரிகளை சந்திக்க, நவக்கிரக சாந்தி செய்ய, ரத்தினங்கள் அணிய, பயணம் தொடங்க நல்ல நாள். யோக ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாசிப் பருப்பு பாயசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம் நீங்கும். பச்சைப் பயிறு தானம் செய்வதும் நன்மை அளிக்கும்.

மேஷம்: தொட்டது துலங்கும். தெளிவு பிறக்கும். அனுபவப்பூர்வமாக பேசுவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். கடனை தீர்க்க வழி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பர்.

ரிஷபம்: வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர். கடந்த காலசுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர். உறவினர்களுடன் வீண் விவாதம் வேண்டாம். எதிலும் உங்கள் கை ஓங்கும்.

மிதுனம்: தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும். ஓரளவு பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக வீட்டை அதிக செலவு செய்து சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள்.

கடகம்: அடிப்படை வசதிகள் பெருகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.

சிம்மம்: எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும்.

கன்னி: வெளிவட்டாரத்தில் புகழ், கவுரவம் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். வாசனை திரவியம், கலை பொருட்கள் வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

துலாம்: பணப் பற்றாக்குறை, வீண் டென்ஷன் வந்து போகும். வீட்டில் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்காது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர்
வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சரி செய்வீர். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

தனுசு: எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்.

மகரம்: பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். பணவரவு மனநிறைவை தரும்.

கும்பம்: வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு பொறுப்பாக நடந்து கொள்வர். உங்களை சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர்.

மீனம்: எதிர்மறை சிந்தனை, ஏமாற்றம் வந்து நீங்கும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். தானாக முடிவு எடுக்காமல் குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது நல்லது.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x