Published : 25 Mar 2024 05:06 AM
Last Updated : 25 Mar 2024 05:06 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: வியாபாரம் தொடங்க, வீடு, மனை வாங்க, குழந்தைக்கு சிகை நீக்கி, காது குத்த, சோறு ஊட்ட, வாஸ்து பூஜை செய்ய, மகான்களை தரிசிக்க, வழக்குகள் பேசி தீர்க்க, தற்காப்பு கலைகள் பயில நல்ல நாள். சிவஸ்துதி படித்து, சிவன் கோயில்களில் அபிஷேக, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும்.

மேஷம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர் கள். மனைவி வழியில் மதிப்பு, அந்தஸ்து உயரும். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். வியாபாரத்தில் புது வழிமுறைகளை கையாள்வீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். அக்கம் பக்கத்தினர் ஆதரவு பெருகும். பழைய பொருட்களை மாற்றுவீர்கள்.

மிதுனம்: பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வாகன செலவுகள் நீங்கும். வீண் அலைச்சல், செலவுகளில் இருந்து விடுபடுவீர்கள்.

கடகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். வழக்கில் சாதகமான திருப்பம் வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்கு வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் பேச்சுக்கு செவிசாய்ப்பீர்கள். அக்கம் பக்கத்தினர் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

கன்னி: பழைய பிரச்சினை தலைதூக்கும். வீண் அச்சம், கவலை வேண்டாம். வழக்கு விவகாரங்களில் நிதானம் தேவை. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். அலைச்சலுடன் ஆதாயமும் உண்டு.

துலாம்: வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. பண வரவால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கல்கள் தீரும்.

விருச்சிகம்: புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். பழைய பொருட்களை மாற்றுவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வீண் அலைச்சல், அசதி, செலவு குறையும்.

தனுசு: உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிப் படும். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. திருமண பேச்சு சுமுகமாக முடியும். மனைவி வழியில் நல்ல சேதி உண்டு. பிள்ளைகளால் மதிப்பு கூடும்.

மகரம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். எதிலும் பொறுமை தேவை.

கும்பம்: யாருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம். எதிர்பாராத செலவுகள் வரக்கூடும். பெற்றோர் உடல்நலத் தில் அக்கறை காட்டுவீர்கள். வீண்கோபத்தை குறையுங்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மீனம்: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடப்பார்கள். நீண்ட நாட்களாக செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x