Published : 15 Mar 2024 05:10 AM
Last Updated : 15 Mar 2024 05:10 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: விருதுகள், புத்தகங்கள் வெளியிட, கடன் வாங்க, கடன் பைசல் செய்ய, வாகனம் வாங்க, குழந்தை தத்தெடுக்க,
ஆலோசனை கூட்டங்கள் நடத்த, அன்ன தானம் செய்ய நல்ல நாள். ராகுகாலத்தில் மாரியம்மன் கோயில்களில் எள் அல்லது நெய் தீபம் ஏற்றினால் தடைகள் விலகும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சிவஸ்துதி, மகாலட்சுமி அஷ்டோத்திரம், அன்னபூர்ணாஷ்டகம், ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை படித்து வந்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

மேஷம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர். சேமிப்பை அதிகரிப்பீர். மனதில் தெளிவு பிறக்கும். தாயாரின் உடல்நலம் சீராகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

ரிஷபம்: எடுத்த வேலையை போராடி முடிப்பீர்கள். ஈகோ பிரச்சினையால் கணவன் - மனைவிக்குள் கருத்து மோதல் வெடிக்கும். பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: சகோதரர்களின் ஆதரவு உண்டு. பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சி கிட்டும். ஷேர் மூலமாக பணம் வரும். பழைய வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசிப் பழகவும்.

கடகம்: சவால்கள், ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். பழைய கடன்களை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. புதிய வாகனம் வாங்குவீர்.

சிம்மம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவு எடுப்பீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். சகோதரர்களின் ஆதரவு கிட்டும். பணவரவு உண்டு.

கன்னி: பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். ஓரளவு பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். பழைய பிரச்சினைகளுக்கு நிறைவான தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரவாக இருப்பார்.

துலாம்: யாரையும் விமர்சித்து பேசாதீர். பிள்ளைகளால் செலவு வரக் கூடும். வியாபாரத்தில் தன்னிச்சையாக முடிவு எடுக்க வேண்டாம். அண்டை வீட்டாருடன் அளவாகப் பேசி பழகவும். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை சீர் செய்வீர்கள்.

தனுசு: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் தொல்லைகள் அகலும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பழுதான எலெக்ட்ரானிக் பொருட்களை மாற்றுவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள்.

மகரம்: புதிய எலெட்ரானிக்ஸ் பொருட்கள் வீடு வந்து சேரும். பழைய சொந்தங்களால் ஆதாயம் உண்டு. ஈகோ பிரச்
சினை தீர்ந்து கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.

கும்பம்: தடைபட்டுக் கொண்டிருந்த மகன், மகளின் திருமணம் கைகூடி வரும். பணவரவு ஓரளவு திருப்தி தரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்தை அதிக செலவு செய்து சீரமைப்பீர்கள்.

மீனம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷசங்களில் பங்கேற்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. சகோதரியின் கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x