Published : 10 Feb 2024 06:00 AM
Last Updated : 10 Feb 2024 06:00 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: வாகனம் விற்க, தற்காப்புக் கலைகள் பயில, உடற்பயிற்சி மற்றும் அழகு சாதனங்கள் வாங்க, வீடு, மனை விற்க, அதிகாரிகளை சந்திக்க நல்ல நாள். சனிபகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் கோயிலில் அவருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், தடைகள் விலகும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் எதிலும் வெற்றி கிடைக்கும். விஷ்ணு சஹஸ்ரநாமம், விநாயகர் அகவல் படித்தால் மன அமைதி கிடைக்கும்.

மேஷம்: உங்களின் நட்பு வட்டம் விரியும். பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிது வாங்குவீர்கள். புதிய வீடு வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.

ரிஷபம்: அயல்நாட்டு நண்பர்கள், உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்து உங்கள் கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

மிதுனம்: வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். கணவன் - மனைவிக்குள் சிறு சிறு உரசல்கள் வந்து போகும். சொந்த ஊரில் எதிர்ப்புகள் வரும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரில் சென்று முடிப்பது நல்லது.

கடகம்: எதிரிகளின் பலம் குறையும். குழப்பம் நீங்கி கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும்.

சிம்மம்: திடீர் பணவரவு, செல்வாக்கு, மனை வாங்குதல் நடைபெறும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். உடன்பிறந்தவர்கள் உதவுவர். வியாபாரத்தில் பணியாளர்கள் பொறுப்புடன் நடப்பர்.

கன்னி: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர் யார் என்பதை உணர்வீர். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. வீண் விவாதங்கள் வேண்டாம்.

துலாம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் பழைய பொருட்களை மாற்றுவீர்கள். தியானம், ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வீண் அலைச்சல் குறையும்.

விருச்சிகம்: வெளிவட்டாத்தில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

தனுசு: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீண் அலைச்சல்களிலிருந்து விடுபடுவீர்கள். வாகனச் செலவு நீங்கும்.

மகரம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.

கும்பம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

மீனம்: குழப்பங்கள் நீங்கி கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x