Published : 14 Nov 2023 06:00 AM
Last Updated : 14 Nov 2023 06:00 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பாராத அலைச்சலும், செலவுகளும் இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாகப் புரிந்து கொள்வர். தாயார் உடல் நலத்தில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினரிடம் அளவாக பழகவும்.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர். அழகு, இளமை கூடும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

மிதுனம்: வேற்றுமொழி, வேற்றுமதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வேலை சாதகமாக அமையும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பிள்ளைகளின் படிப்பு விஷயமாக அலைச்சல் அதிகமாகும்.

சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கு
வீர்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும்.

கன்னி: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மன இறுக்கம் நீங்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான நிலை வரும். பணவரவு உண்டு.

துலாம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறை
யால் முடித்துக் காட்டுவீர்கள். நீண்ட நாளாக பேசாமல் இருந்த உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

விருச்சிகம்: மறைமுக அவமானம் ஏற்படக் கூடும். குலதெய்வம் கோயில் முக்கிய நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்த திட்டமிடுவீர்கள். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதி இழப்பீர்கள்.

தனுசு: திடீர் பணப் பற்றாக்குறை, தூக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து நீங்கும். புதிய வீடு வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

மகரம்: முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். சிலருக்காக முக்கிய பொறுப்புகளை ஏற்பீர்கள். கவுரவ பதவி தேடி வரும். வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்பட்டு, புதிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

மீனம்: நினைத்த காரியம் நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீரும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். பணவரவு உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x