Last Updated : 27 Oct, 2023 01:42 AM

1  

Published : 27 Oct 2023 01:42 AM
Last Updated : 27 Oct 2023 01:42 AM

மகரம் ராசியினருக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் | 30.10.2023 - 19.05.2025

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

மனிதர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ளவர்களே! துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமைதாங்கிகளே! புரட்சிகரமான எண்ணங்கள் உடைய நீங்கள், மனிதநேயத்தை மழுங்க வைக்கும் மூடச் சிந்தனைகளை தூக்கி எறிவீர்கள்.

ராகுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு தாயாருக்கு மருத்துவச் செலவையும், மனஸ்தாபங்களையும் கொடுத்து உங்களை நாலாபுறமும் பந்தாடிய ராகு பகவான், இப்போது ராசிக்கு 3-ம் வீட்டுக்கு வந்தமருவதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். சோம்பல், அலட்சியம் நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

இனி குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உங்களின் ஆலோசனையை அனைவரும் ஏற்பார்கள். கணவன் - மனைவிக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி முழு மூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள் இப்போது திருப்பித் தருவார்கள். தாயாரின் ஆரோக்கியம் கூடும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அவர்களை மேல்படிப்பு, வேலை காரணமாக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள்.

மகளுக்கு திருமணம் நடந்தேறும். குலதெய்வம் கோயிலில் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். உங்களின் நட்பு வட்டம் இனி விரியும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வீடு கட்டும் கனவு நனவாகும். கன்னிப் பெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். பாதியிலேயே விட்ட படிப்பை மீண்டும் தொடர்வார்கள். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு எப்போதும் உண்டு.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 6.7.2024 வரை ராகு பகவான் செல்வதால் தந்தையாரின் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, மனை வாங்குவீர்கள். திடீர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 6.7.2024 முதல் 15.3.2025 வரை ராகு பகவான் செல்வதால் கல்யாணம் ஏற்பாடாகும். கால் வலி, வயிற்று வலி குறையும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. நிர்வாகத் திறமை கூடும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 15.3.2025 முதல் 19.5.2025 வரை ராகுபகவான் சஞ்சாரம் செய்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நஷ்டங்களை இனி ஈடுகட்டும் அளவுக்கு உங்களின் அணுகுமுறை மாறும்.

போட்டியாளர்களே திகைக்கும் அளவுக்கு புது யுக்திகளை கையாளுவீர்கள். ஷேர், புரோக்கரேஜ் மூலம் ஆதாயம் அடைவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களை அலட்சியப்படுத்திய மேலதிகாரி இனி நேசக்கரம் நீட்டு வார். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். பதவி உயர்வு உண்டு. கலைஞர் கள், கிடைக்கும் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்து எந்த பணிகளையும் செய்ய விடாமல் ஒருவித தடுமாற்றத் தையும், தயக்கத்தையும், வீண் குழப்பத்தையும், பழியையும் தந்த கேது பகவான் இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால் சமயோஜித புத்தியுடன் செயல்பட வைப்பார். குடும்பத்தில் நிலவி வந்த குழப்ப நிலை மாறும். பணப் பற்றாக்குறை நீங்கும். வருங்காலத்துக்காக கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். உடன் பிறந்தோரின் ஆதரவு உண்டு. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 4.3.2024 வரை கேது பகவான் செல்வதால் பிள்ளைகளுடன் சின்னச் சின்ன விவாதங்கள் வரும். அவர்களின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்கப் பாருங்கள். பூர்வீக சொத்தை பராமரிக்க அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு.

சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 4.3.2024 முதல் 8.11.2024 வரை கேது பகவான் சஞ்சாரம் செய்வதால் மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு உண்டு. வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள் உதவுவார்கள். தள்ளிப் போன திருமணம் விமரிசையாக நடக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 8.11.2024 முதல் 19.5.2025 வரை கேது செல்வதால் எதிர்பாராத காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். குடும்பத்தில் தம்பதிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். கேது ஒன்பதாம் வீட்டுக்கு வருவதால் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகவும்.

தந்தைவழி சொத்துகளால் அலைச்சல்களும், செலவுகளும் ஏற்படும். பத்திரங்களை கவனமாக கையாளுங்கள். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் உங்களின் நிலைமையை புரிந்து கொள்வார்கள். வேலையின்றி தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். கன்னிப் பெண்களே! வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட் களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கணினி துறையினருக்கு வேலைச்சுமை குறையும். மேலதிகாரி பாராட்டும்படியாக நடந்து கொள்வீர்கள். சலுகைகளுடன் கூடிய வேறு நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். பெண்களுக்கு நாலா பக்கத்தில் இருந்துவந்த பிரச்சினைகள், ஒவ்வொன்றாகத் தீரும். ஒட்டுமொத்த பொறுப்பும் உங்கள் கைக்கு வரும். மற்றவர்கள் கவனிக்கும் நிலைக்கு உயர்வீர்கள்.

கன்னிப் பெண்களுக்கு திருமணமும், வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கைகூடும். ஏற்கெனவே பதவியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொல்லை கொடுத்து வந்த மூத்த அதிகாரி இடமாற்றம் பெறுவார். இந்த ராகு - கேது பெயர்ச்சி விழுந்து கிடந்த உங்களை நிமிர வைப்பதுடன், எங்கும் எதிலும் முதல் மரியாதையை பெற்றுத் தரும்.

பரிகாரம்: மயிலாடுதுறையிருந்து நன்னிலம் அருகிலிருக்கும் ஸ்ரீ வாஞ்சியம் எனும் ஊரில் ராகுவும், கேதுவும் சேர்ந்திருக்கும் அரிய கோலத்தை தரிசிக்கலாம். சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். தடைகள் உடைபடும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x