Published : 24 Sep 2023 05:48 AM
Last Updated : 24 Sep 2023 05:48 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப் பொலிவு, ஆரோக்கியம் கூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள்.

ரிஷபம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக திடீர் பயணங்கள் ஏற்படும். அவ்வப்போது பணப் பற்றாக்குறையும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

மிதுனம்: மன இறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். அக்கம் பக்கத்தினரிடம் அளவாகப் பழகவும்.

கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர் . சேமிக்கும் அளவுக்கு வருவாய்
அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர். முக்
கிய பிரமுகர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். பழைய வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.

கன்னி: மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். நண்பர்கள், உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

துலாம்: புதியவர்கள் அறிமுகவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவி எளிதில் கிடைக்கும்.

விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். உங்கள் மீது இருந்த வீண் பழி நீங்கி, குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கலை பொருட்கள் சேரும்.

தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது.
சொந்த ஊர் திருவிழாவில் முதல் மரியாதை கிடைக்கும். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி தங்கும்.

மகரம்: தவிர்க்க முடியாத செலவுகள் உண்டு. உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்தவேண்டிய சூழல் உருவாகும். பிள்ளைகளுக்கு படிப்பு தொடர்பான அயல்நாட்டு பயணம் ஏற்படும்.

கும்பம்: சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். நவீன ரக வாகனம், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிட்டும்.

மீனம்: கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப் போராட்டங்கள் ஓயும். சில வேலைகளை அடுத்தவர்களிடம் கொடுக்காமல், நீங்களே நேரில் சென்று முடிப்பது நல்லது. பழைய வாகனத்தை விற்க முயற்சிப்பீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x