Published : 22 Sep 2023 05:45 AM
Last Updated : 22 Sep 2023 05:45 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு, செரிமானக் கோளாறு வந்து செல்லும். மாலை முதல் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பழைய கல்லூரி நண்பர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம்: பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மாலை முதல் எதிலும் எச்சரிக்கை தேவை. பழைய வழக்குகளில் திடீர் திருப்பம் ஏற்படும். கலை பொருட்கள் சேரும்.

மிதுனம்: உங்களின் நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறன் அதிகரிக்கும். விஐபிகள் அறிமுகமாவார்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு திருப்தி தரும்.

கடகம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். நவீன மின்னணு, மின்சாதனங்கள் வாங்குவீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும்.

சிம்மம்: எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் வரும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். பிரபலங்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மரியாதை கூடும்.

கன்னி: உங்கள் கை ஓங்கும். மன உறுதி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். புதிய யோசனைகள் உதயமாகும். மனைவி வழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

துலாம்: தடைகள் பல வந்தாலும் தளராமல் சாதிக்க முற்படுவீர்கள். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். பூர்வீக சொத்து பிரச்சினையில் உடன் பிறந்தவர்களுடன் விவாதங்களை தவிர்த்து அனுசரித்து செல்லவும்.

விருச்சிகம்: உங்கள் திறமை மீது அவ்வப்போது சந்தேகம் வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். பிரச்சினைகளும், குழப்பங்களும் தீரும்.

தனுசு: மன இறுக்கம் வந்து செல்லும். நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சொத்து வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்ப்பது நல்லது.

மகரம்: எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தினரின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.

கும்பம்: கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். முக்கிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கலை பொருட்கள் சேரும்.

மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பிரபல தொழிலதிபர்கள் அறிமுகமாவார்கள். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். நண்பர்கள், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x