Last Updated : 30 Aug, 2023 04:21 PM

 

Published : 30 Aug 2023 04:21 PM
Last Updated : 30 Aug 2023 04:21 PM

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.31 - செப்.6

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் சுக்ரன்(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு, ராகு என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் தொடக்கத்தில் காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், சீராக நடக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சினைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள்.

உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். அரசியல்வாதிகள் திட்டமிட்ட எந்த பணிகளும் துரித கதியில் நடைபெறும். கலைத்துறையினருக்கு தொழிலில் இருந்த பிரச்சனைகள் அகலும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்க குடும்ப பிரச்சனை, தொழிற்பிரச்சனை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன் - வெள்ளி.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சூர்யன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு, ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன்(வ) என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் வீடு மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் சுபச்செலவு உண்டாகும். பெண்களுக்கு மனதில் ஒருவித கவலை இருக்கும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.

சூரியன் சஞ்சாரத்தால் அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ், கவுரவம் யாவும் தேடி வரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள். பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பரிகாரம்: முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு, ராகு - லாப ஸ்தானத்தில் சுக்ரன்(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை நீங்கும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. பெண்களுக்கு தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் கிடைக்கும். சக கலைஞசர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அரசியல்வாதிகளுக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்.

பரிகாரம்: நவகிரகத்தில் புதனிற்கு மரிக்கொழுந்து மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி | இந்தவாரம் கிரகங்களின் நிலை:


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x