Last Updated : 03 May, 2014 12:00 AM

 

Published : 03 May 2014 12:00 AM
Last Updated : 03 May 2014 12:00 AM

புகைப்பட தேசங்கள்!

இந்தியாவில் உள்ள புகைப்படச் சங்கங்களுக்கு முன்னோடியான போட்டோகிராபிக் சொசைட்டி ஆஃப் மெட்ராஸ் முதல் முறையாக இந்த ஆண்டு, ‘சென்னை புகைப்பட வாரம்’ என்ற தலைப்பில் சர்வதேச டிஜிட்டல் புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஏப்ரல் 28ந் தேதி தொடங்கிய இக்கண்காட்சி, மே 4 வரை லலித் கலா அகாதமியில் நடைபெறும். இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் தலைசிறந்த புகைப்பட கலைஞர்கள் பங்கேற்கும் பயிற்சி பட்டறைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘போட்டோகிராபிக் சொசைட்டி ஆஃப் மெட்ராஸ்’ நடத்தும் இந்த முதல் சர்வதேசக் கண்காட்சியை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்தார். “இந்த சர்வதேச டிஜிட்டல் புகைப்படக் கண்காட்சிக்கு 22 நாடுகளில் இருந்து 1,600 புகைப்படங்கள் வந்திருந்தன. அதில் வெற்றிபெற்ற 466 புகைப்படங்களை இக்கண்காட்சியில் வைத்திருக்கிறோம். இந்தச் சர்வதேச புகைப்படக் கண்காட்சியை ஒவ்வொரு ஆண்டும் போட்டோகிராபிக் சொசைட்டி ஆஃப் மெட்ராஸ் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது”, என்கிறார் அதன் தலைவர் சஞ்சய் ஸ்ரீதர்.

திறந்தவெளி, பயணம், இயற்கை,மேக்ரோ போன்ற தலைப்புகள் இக்கண்காட்சியில் பங்கேற்கும் புகைப்படக் கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. தேர்வான புகைப்படங் களுக்குத் தங்கம், வெள்ளி வெண்கலம் என்ற மூன்று தலைப்புகளில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘திறந்தவெளி’ தலைப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் டெம் என்பவரின் ‘இன்டு த டான்’ என்ற புகைப்படம் தங்கம் வென்றது. இந்தியப் புகைப்படக் கலைஞர் சந்தோஷ் ராஜ்கரியாவின் ‘விசிட்டர் அட் தாஜ்’ என்ற புகைப்படம் ‘பயணம்’ பிரிவில் தங்கம் வென்றது.

1857-ம் ஆண்டு அலெக்சாண்டர் ஹண்டர் மற்றும் வால்டர் எலியட் ஆகியோரால் தொடங்கப் பட்ட பிஎஸ்எம் உலகின் பழமையான புகைப்படச் சங்கங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு: www.photomadras.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x