Last Updated : 08 Feb, 2015 06:11 PM

 

Published : 08 Feb 2015 06:11 PM
Last Updated : 08 Feb 2015 06:11 PM

அணு உலை விபத்து பொறுப்பேற்பு சட்டத்தில் மாற்றமில்லை: வெளியுறவு அமைச்சகம் தகவல்

அணு உலை விபத்துகளுக்கு பொறுப்பேற்பது தொடர்பாக இந்தியாவின் சட்டத்தில் மாற்ற மில்லை என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களால் இந்தியாவில் அமைக்கப்படும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதற்கு அந்த நிறு வனங்களை பொறுப்பாக்கும் வகையில் (பொதுமக்களுக்கு அதனால் ஏற்படும் நஷ்டஈட்டை அளிப்பது) அணு உலை விபத்து பொறுப்பேற்பு சட்டம் (CLND - Civil Liability for Nuclear Damage) நாடாளுமன்றத்தில் 2010-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை அமெரிக்க நிறுவனங்கள் எதிர்த்தன. ‘அணு உலை அமைப்பது மட்டும் தான் எங்கள் வேலை. விபத்து ஏற்பட்டால் அதற்கு நஷ்டஈட்டை நாங்கள் தரமுடியாது’ என்று அந்நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமீபத்திய இந்தியப் பயணத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப் பட்டதாக கூறப்பட்டது.

என்றாலும், அணு உலை விபத்து ஏற்பட்டால், விபத்துக்கு பொறுப்பேற்பது, இழப்பீடு அளிப் பது, இழப்பீடு கோரும் உரிமை ஆகியவை தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட நிலைப்பாடு தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளி யிட்டுள்ள அறிக்கையில், இந்தி யாவின் சிஎன்எல்டி சட்டத்தில் மாற்றமில்லை என்று கூறப் பட்டுள்ளது.

அணு உலை விபத்து ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இழப்பீடு கோரும் உரிமை உள்ளது. ஆனால் இவர்கள் அணு உலையை அமைத் துத் தந்த சப்ளையர் நிறுவனங்கள் மீது நேரடியாக வழக்கு தொடர முடியாது. அணு உலையை இயக்குபவர்களே இந்த வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் உள்ள தடைகள் தொடர்பாக, இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தக் குழு லண்டனில் சந்தித்துப் பேசியது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமீபத்திய இந்தியப் பயணத்துக்கு 3 நாட்கள் முன்பு இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் 3 சுற்று பேச்சு வார்த்தைக்குப் பிறகு, அணு சக்தி ஒத்துழைப்பில் நிலுவையில் உள்ள 2 முக்கியப் பிரச்சினைகள் குறித்து அமெரிக்காவுடன் புரிந் துணர்வு ஏற்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் ஜனவரி 25ம் தேதி உறுதி செய்தனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அணு உலைகளால் விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டிற்கு இந்திய பொதுத் துறை நிறுவனமான இந்திய அணுசக்தி நிறுவனமே (Nuclear Power Corporation of India Ltd) பொறுப்பு என்பதை வெளி யுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x