Published : 19 Jan 2015 03:11 PM
Last Updated : 19 Jan 2015 03:11 PM

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (திங்கள்கிழமை) இரவு புறப்படும் புதுடெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "வண்டி எண்.12615 சென்னை சென்ட்ரல் – புதுடெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (19.01.2015) இரவு 07.15 மணிக்கு புறப்படவேண்டிய இந்த எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை (20.01.2015) காலை 07.00 மணிக்கு புறப்படும் இணை ரயில் காலதாமதமாக வருகின்ற காரணத்தினால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வண்டி எண்.12621 சென்னை சென்ட்ரல் – புதுடெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (19.01.2015) இரவு 10.00 மணிக்கு புறப்படவேண்டிய இந்த எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை (20.01.2015) காலை 05.00 மணிக்கு புறப்படும் இணை ரயில் காலதாமதமாக வருகின்ற காரணத்தினால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x