Published : 07 Jan 2015 08:39 AM
Last Updated : 07 Jan 2015 08:39 AM

நிலக்கரி ஊழியர்களின் 5 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பம்: மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

நாடு முழுவதும் உள்ள நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 5 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் மின் உற்பத்தி தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்களுக்கு நாளொன்றுக்கு 15 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. 1977-ம் ஆண்டுக்குப் பிறகு இத்துறை யில் நடைபெறும் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் இதுவாகும். பாஜக ஆதரவு பெற்ற தொழிலாளர் யூனியன் பாரதிய மஸ்தூர் சங் (பிஎம்எஸ்) உள்ளிட்ட 5 முக்கிய தொழிற் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நிலக் கரித் துறையை தனியார் மயமாக்கு வதைக் கைவிட வேண்டும் என்பது போராட்டக் குழுவினரின் முக்கிய மான கோரிக்கையாகும்.

வேலை நிறுத்தப் போராட் டத்தால் நாளொன்றுக்கு 15 லட்சம் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவது பாதிக்கப்படும் என தெரிகிறது. ஏற்கெனவே நிலக்கரி பற்றாக் குறையால் தவிக்கும் அனல் மின் நிலையங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் நிலக்கரி கிடைக்காமல் உற்பத்தியை நிறுத்த வேண்டியிருக்கும் என தெரிகிறது. இந்த விவகாரம் சுமுகமாகத் தீர்க்கப்படும் என்றும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை அரசு நன்கு அறிந்துள்ளது. இருப்பினும் இதன் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்று இப்போதே கணிக்க முடியாது என்று கோல் இந்தியா நிறுவ னத்தின் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள சுதிர்த பட்டாச்சார்யா தெரிவித்தார்.

கடந்த காலாண்டில்தான் நிலக்கரி உற்பத்தி அதிகரித்தது. இந்த நிதி ஆண்டின் இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப் படும் என்றிருந்த நிலையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய நலன் கருதி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு ஊழியர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிமிஷம் வரை வேலை நிறுத் தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

இந்த வேலை நிறுத்தப் போராட் டத்தில் 7 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளதாக அகில இந்திய நிலக்கரி தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஜிபோன் ராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிஎம்எஸ், ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சிஐடியு, ஹெச்எம்எஸ் ஆகிய யூனியன் தலைவர்களுடன் பேச்சு நடத்த அரசு அழைப்பு விடுத் துள்ளது என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்பு இரண்டு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்க தொழிற்சங்கங்கள் மறுத்து அதைப் புறக்கணித்து விட்டன.

நாடு முழுவதும் உள்ள தொழி லாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடருகின்றனர் என்று இந்திய தேசிய சுரங்கத் தொழிலாளர் சம்மேளனத்தின் செயலர் எஸ்.டி. ஜாமா தெரி வித்தார். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு முதல் ஷிப்ட் முதல் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியதாக அவர் தெரி வித்தார். கோல் இந்தியா நிறுவனத் தின் 100 சதவீத பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சில அவசர கால பணிகள் மட்டும் நடைபெறு கின்றன. சிங்ரேணி கோலரீஸ் நிறுவனத்தில் 80 சதவீத பணி யாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொல்கத்தாவில் உள்ள கோல் இந்தியா நிறுவன தலைமையக வாயிலில் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித் தனர். நாட்டிலுள்ள அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியில் 80 சதவீதம் கோல் இந்தியா நிறுவனம் மூலம் சப்ளை செய்யப்படுகிறது.

இதனிடையே சுரங்கத் தொழி லாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மின்துறை ஊழியர்கள் சங்கம் (இஇஎப்ஐ) ஆதரவு தெரிவித்துள்ளது.

வேலை நிறுத்தப் போராட்டம் 100 சதவீதம் வெற்றியடைந்ததாக அகில இந்திய தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) தெரிவித்துள்ளது. கோல் இந்தியா நிறுவனத்தின் 9 துணை நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து 5 லட்சம் பணி யாளர்களும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண் டுள்ளதாக ஏஐடியுசி வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் மூலம் வெளி யிடப்பட்ட அவசர சட்டத்தைத் திரும்பப் பெற்று தொழிலாளர் சங் கங்களுடன் பேச்சு நடத்த முன்வர வேண்டும். ஊழியர்கள் முன் வைக் கும் பிற பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க வேண்டும் என்று ஏஐ டியுசி வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x