Published : 18 Dec 2014 10:55 AM
Last Updated : 18 Dec 2014 10:55 AM

அஜய் எஸ் ஸ்ரீராம் - இவரைத் தெரியுமா?

$ டிசிஎம் ஸ்ரீராம் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் மற்றும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவர்.

$ மும்பை சைடன்ஹாம் கல்லூரியில் வணிகவியல் படித்தவர். ஹார்வேர்ட் நிர்வாக கல்லூரியில் நிர்வாக பயிற்சி பெற்றவர். மேலும் பல முக்கியமான நிர்வாக கல்லூரிகளில் நிர்வாக பயிற்சி பெற்றிருக்கிறார்.

$ ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியின் நிர்வாக குழுத்தலைவராக இருக்கிறார். தவிர டேராடூனில் இருக்கும் டூன் கல்லூரியின் நிர்வாக குழுவில் இருந்தவர். மேலும் சர்வதேச உர உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர், இந்திய உர உற்பத்தியாளர் சங்கத் தலைவர் என பல தொழில்துறையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

$ பணவீக்கமும் குறைவாக இருக்கிறது, பற்றாக்குறையும் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனவே பொருளாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல ஒரு சதவீத அளவுக்கு வட்டி குறைப்பு தேவை என்று தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x