Published : 10 Apr 2015 03:42 PM
Last Updated : 11 Apr 2015 10:07 AM
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நிர்வாகம் தரப் பிலான சில கோரிக்கைகள் ஏற்கப் பட்டன. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 13-ம் தேதி நடக்கவுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் 1.43 லட்சம் ஊழியர்களுக்கு புதிய ஊதியம் ஒப்பந்தம் போடுவது தொடர்பாக 5-ம் கட்ட பேச்சு வார்த்தை சென்னை குரோம் பேட்டையில் உள்ள பணிமனை யில் நேற்று நடைபெற்றது. போக்கு வரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பிரபாகரராவ், நிதித் துறை கூடுதல் செயலாளர் உமாநாத், போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள் உள்பட 14 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர். தொழிற்சங் கங்கள் சார்பில் தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சின்னச் சாமி, சிஐடியு தலைவர் சவுந்தர ராஜன் உட்பட 42 தொழிற்சங்கங் களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஏற்கனவே நடந்த 4 கட்ட பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர் பாக அமைச்சர் முன்னிலையில் ஆலோசனை நடத்தப்பட்டது. போக்கு வரத்து தொழிலாளர் களுக்கு பதவி உயர்வில் உள்ள குளறுபடி களை அகற்றுதல், 240 நாட்கள் பணியாற்றினால் பணி நிரந்தரம் செய்து ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்குதல், விபத்தின் போது தொழிலாளர் களுக்கு மாற்றுப்பணி வழங்கு தல் உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற் கப்பட்டன. இந்த பேச்சுவார்த்தை சமூகமாக நடந்துள்ள நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை 13-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், ஏஐடியுசி பொதுச்செயலாளர் லட்சுமணன் ஆகியோர் இதுபற்றி கூறும் போது, “ஏற்கனவே நடந்த 4 கட்ட பேச்சுவார்த்தையில் விவாதிக்கப் பட்டு அதிகாரிகளிடம் முன்வைக் கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அமைச்சருடன் பேசினோம். குறிப் பாக போக்குவரத்து கழகத்தில் ஏற்கனவே உள்ள தொழிலாளிகள் மற்றும் நிர்வாகத்தின் பங் களிப்புடன் நடத்தப்பட்டு வரும் ஓய் வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும், தொழில்நுட்ப பிரி வில் பணியாற்றும் தொழில்நுட்ப பிரிவு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம். சில கோரிக்கைகளில் எந்த முன் னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. எனவே, நிதித்துறையுடன் ஆலோ சனை நடத்திய பின்னர், வரும் 13-ம் தேதி அடுத்த கட்டமாக பேசலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்’’ என்றனர்.
தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறும்போது, “ 2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த 54,000 பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள பிரச்சினை, சேமநல திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தையில் எடுத்துரைத்தோம்.
டிக்கெட் பரிசோதர்கள், ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் நிர்ணயித்தல் உள்ளிட்ட கோரிக்கை களும் முன்வைக்கப்பட்டுள் ளன. 12-வது ஊதிய ஒப் பந்தத்தில் 50 சதவீதம் ஊதிய உயர்வு தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பேசவுள்ளோம்’’ என்றார்.