Published : 22 Apr 2015 11:02 AM
Last Updated : 22 Apr 2015 11:02 AM

கோக-கோலா ஆலை அனுமதி ரத்து: போராட்டக் குழு சந்தேகம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கோக- கோலா நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கி மேற்கொண்ட ஒப்பந்தத்தை சிப்காட் நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் பணிகள் தொடங்காததால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. | முழு விவரம்>கோக-கோலா நிறுவனத்துக்கான நில ஒப்பந்தம் ரத்து: கோக - கோலா நிறுவனம் விளக்கம் |

இந்த நிலையில், அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ள போராட்டக் குழுவினர், அது குறித்த அறிவிப்பு ஏன் அதிகாரப்பூர்வமாகவோ, வெளிப்படையாகவோ தெரிவிக்கப்படவில்லை என கேள்வியெழுப்பியுள்ளனர்.

கோக-கோலா தொழிற் சாலை அமைக்க நிலம் வழங்கும் ஒப்பந்தத்தை சிப்காட் ரத்து செய்துள்ள நிலையில், ஆலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திய அனைத்து கட்சிகள் கொண்ட போராட்டக்குழுவினர் இன்று (22-ம் தேதி) தங்கள் நிலைப் பாட்டை தெரிவிக்கவுள்ளனர். ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, போராட்டங்களில் ஈடுபட்டவர்களிடம் பேசியபோது, 'மக்களின் உணர்வுக்கும், போராட்டத்துக்கும் அரசு மதிப்பு கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் அதை அமைச்சர்கள், அரசு செயலர் அல்லது நிர்வாக இயக்குநர் போன்றவர்கள் ஏன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. குறைந்தபட்சம் ஈரோடு ஆட்சியர்கூட இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட உத்தரவில் எவ்வித காரணமும் தெரிவிக்கப்பட வில்லை. இதன் மூலம் ஆலை நிர்வாகம் சட்டரீதியாக முயற்சிகளை எடுக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதோ? என சந்தேகிக்க வேண்டியுள்ளது' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x