Published : 08 Dec 2014 19:23 pm

Updated : 09 Dec 2014 10:04 am

 

Published : 08 Dec 2014 07:23 PM
Last Updated : 09 Dec 2014 10:04 AM

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரம்: உங்கள் பிரச்சினை.. என் பிரச்சினை.. - மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி

உங்கள் வலி எனது வலி. உங்கள் பிரச்சினை எனது பிரச்சினை. காஷ்மீர் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்கு தலில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள், 6 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர். இந்நிலையில் நகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் மிகுந்த பாதுகாப்புக்கு நடுவே பாஜக சார்பில் நேற்று மதியம் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக பேசியதாவது:

கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி, தந்தையும் மகனும் (தேசிய மாநாட்டு கட்சி), தந்தையும் மகளும் (மக்கள் ஜனநாயக கட்சி) மாறி மாறி செய்த ஆட்சியை நீங்கள் (பொதுமக்கள்) பார்த்து விட்டீர்கள். இவர்களது ஆட்சியில் எதைக் கண்டீர்கள்? தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்ட அவர்கள், உங்களுக்காக எதுவும் செய்யவில்லை.

இந்த மூன்றுவிதமான பரம்பரை ஆட்சியாளர்களிடமிருந்தும் விடுபடுவதற்கு பாஜகவுக்கு ஒருமுறை வாய்ப்பு அளியுங்கள். உங்கள் கனவை நாங்கள் நனவாக்கிக் காட்டுகிறோம். ஊழல் இந்த மாநிலத்தை சீரழித்து விட்டது. இங்கு தீவிரவாதம் முடிவுக்கு வந்தாலும் ஊழல் முடிவுக்கு வரவில்லை. இத்தகைய ஊழலுக்கு முடிவுக் கட்டுவதே நம் முன்பு உள்ள மிகப் பெரிய சவால்.

காஷ்மீர் மக்கள் என் மீது அதிக நம்பிக்கையும் அன்பும் வைத் துள்ளனர். இந்த நம்பிக்கையையும் அன்பையும் வட்டியுடன் சேர்த்து வளர்ச்சி வடிவத்தில் திருப்பித் தருவேன். இதற்காக எனது உயிரை யும் இழக்கத் தயாராக உள்ளேன்.

உங்கள் வலி எனது வலி. உங்கள் பிரச்சினை எனது பிரச்சினை. நாட்டின் முதல் சேவகன் (பிரதமர்) என்ற முறையில் உங்களது வலி யையும் வேதனையையும் பகிர்ந்து கொள்வதற்காகவே இங்கு வந்துள்ளேன்.

தீவிரவாத தாக்குதலுக்கு ராணுவ வீரர்கள், போலீஸார், பொது மக்கள் பலர் பலியாகி உள்ளனர். இத்தகைய இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. ஆனால் அந்த வேதனையை பகிர்ந்து கொள் வதன் மூலம் அவர்களது குடும்பத்தினரின் வலி குறையும்.

வாஜ்பாய் கனவை நனவாக்குவேன்

கடந்த 2003-ம் ஆண்டு இதே இடத்தில் பேசிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 21-ம் நூற்றாண் டில காஷ்மீர் வளர்ச்சிப் பாதைக்கு திரும்புவதற்கு சமூக நல்லிணக்கம், மனிதத்தன்மை மற்றும் ஜனநாயகம் ஆகிய மூன்று முக்கிய தூண்களை வலிமையாக்குவது அவசியம் என வலியுறுத்தினார். அவரது கனவை நனவாக்குவதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். இவ்வாறு மோடி தெரிவித்தார்.

முன்னதாக, ஸ்ரீநகரில் உள்ள ராணுவ பதாமி பாக் தலைமை யகத்துக்குச் சென்ற நரேந்திர மோடி, கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அங்குள்ள போர் நினைவகத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ஏகே 47-ஐவிட வாக்குகள் வலிமையானது

நேற்று காலையில் ஜம்மு மண்டலத்துக்குட்பட்ட சம்பா நகரில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:

ஏகே 47 ரக துப்பாக்கியில் விரலை பதிப்பதைவிட, வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது பதிப்பதுதான் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை இளைஞர்கள் உணர்ந்து ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப வேண்டும்.

இந்த மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு மறுவாழ் வளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். கடந்த செப்டம்பர் மாதம் இந்த மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது இங்கு நான் வந்தேன். உங்கள் பிரச்சினை யைக் கேட்டேன். அதற்கேற்ற திட்டங்களை அறிவித்துள்ளேன். இப்போதும் பாகிஸ்தானின் செயல் பற்றி பேச விரும்பவில்லை. உங்களது பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு மோடி பேசினார்.

பிரதமர் மோடிஜம்மு காஷ்மீர்ஸ்ரீநகர்தேர்தல்இந்தியா

You May Like

More From This Category

More From this Author