Published : 15 Apr 2014 10:52 am

Updated : 15 Apr 2014 10:52 am

 

Published : 15 Apr 2014 10:52 AM
Last Updated : 15 Apr 2014 10:52 AM

ஐரின் ரோஸன்பீல்ட் - இவரைத் தெரியுமா?

$ கேட்பரி, டெய்ரிமில்க் உள்ளிட்ட பல தின்பண்டங்களைத் தயாரிக்கும் மாண்டெலஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர்.

$ 30 வருடங்களுக்கு மேல் எஃப்.எம்.சி.ஜி. துறையில் அனுபவம் மிக்கவர். தன்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையை ஜெனரல் புட்ஸ் எனும் நிறுவனத்தில் தொடங்கினார். இந்த நிறுவனம் பின்னாளில் கிராப்ட் ஃபுட் நிறுவனத்துடன் இணைந்தது.

$ 2004-ம் ஆண்டு கிராப்ட் ஃபுட் நிறுவனத்திலிருந்து சில காலம் விலகி, பெப்சிகோ நிறுவனத்தின் துணை நிறுவனமான Frito-Lay நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார்.

$ பைனான்ஸியல் டைம்ஸ், போர்ப்ஸ், பார்சூன் ஆகிய பத்திரிகைகள் வெளியிடும் சக்தி மிகுந்த பெண்கள் பட்டியலில் இவர் இடம் பிடித்திருக்கிறார்.

$ கார்னெல் பல்கலைக்கழகத்தில் சைக்காலஜி, நிதி நிர்வாகம் படித்தவர். மேலும் இதே பல்கலைகழகத்தில் புள்ளியியல் மற்றும் மார்கெட்டிங் பிரிவில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.



ஐரின் ரோஸன்பீல்ட்இவரைத் தெரியுமாகேப்டரிடெய்ரிமில்க்மாண்டலெஸ்

You May Like

More From This Category

More From this Author